AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer 2: ஐமேக்ஸ் தரத்தில் திரையரங்குகளில் ஜெயிலர் 2 – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் தகவல்!

Jailer 2 In IMAX: 2026ம் ஆண்டில் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த படங்களில் ஒன்று ஜெயிலர் 2. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக கூறப்பட்டிருந்தாலும், இன்னும் சில காட்ச்சிகளில் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இப்படத்தின் காட்சிகள் ஐமேக்ஸ் தரத்தில் திரையிடப்படுவதாக தகவல்.

Jailer 2: ஐமேக்ஸ் தரத்தில் திரையரங்குகளில் ஜெயிலர் 2 – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் தகவல்!
ஜெயிலர் 2 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 May 2026 13:37 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) முன்னணி நடிப்பில் தமிழில் வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தயாரிக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மதமாக தயாராகியுள்ளது. இப்படம் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1ன் படத்தின் தொடர்ச்சியாக தயாராகியுள்ள நிலையில், ஜெயிலர் 1 படத்தில் நடித்த அனைவரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), பவன் கல்யாண் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட ஒண்றரை ஆண்டுகளாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில காட்சிகளுக்கான ஷூட்டிங் மற்றும் நடைபெற்றுவருகிறதாம். அந்த வகையில் இதில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி சிறப்பு நடனமாடியுள்ளாராம். அந்த வகையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தை திரையரங்குகளில் ஐமேக்ஸ் (IMAX) தரத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: மலையாளத்தில் உருவான பாலன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட படைப்பான ஜெயிலர் 2 படமானது, சன் பிக்ச்சர்ஸ் நிறுவன தயாரித்துவருகிறது. இப்படத்தை உலகெங்கிலும் உள்ள திரடியரங்குகளிலும் ஐமேக்ஸ் தரத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இந்தியா முழுவதும் கடந்த 2 வாரங்களில் பிரத்யேக ஐமேக்ஸ் தரத்தில் வெளியிடவேண்டும் என படக்குழு பேச்சுக்களை நடத்திவருகிறதாம். இப்படமானது வரும் 2026 செப்டம்பர் 3ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது. கடந்தமுறை கூலி படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியாகவில்லை.

இதையும் படிங்க: 15 அன்கட் வெர்ஷனில் வெளியானது கருப்பு படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்நிலையில் ஜெயிலர் 2 படமானது ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது ஜெயிலர் 2 படத்தின் சிறப்பு பாடலுக்கான ஷூட்டிங் நடைபெற்றுவருகிறதாம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிகிலியில், படத்தின் பாடல்கள் எல்லாமே மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தேதியை படக்குழு வெளியிடும் என வட்டாரங்கள் கூறுகின்றது.

Follow Us