AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sanjana Krishnamoorthy: டிசி திரைப்படம் ஒரு வித்தியாசமான உலகம் – நடிகை சஞ்சனா பகிர்ந்த தகவல்!

Sanjana Krishnamoorthy About DC Movie: தமிழ் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. இவர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், இப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

Sanjana Krishnamoorthy: டிசி திரைப்படம் ஒரு வித்தியாசமான உலகம் – நடிகை சஞ்சனா பகிர்ந்த தகவல்!
நடிகை சஞ்சனாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 May 2026 17:02 PM IST

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) கடந்த 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து (Lubber Pandhu) படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் நுழைந்தவர். இவர் சினிமாவில் இயக்குநராகவேண்டும் என்று நுழைந்த நிலையில், மணிரத்னம் (Mani Ratnam) போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு 2025ம் ஆண்டில் வெளியான தக் லைஃப் (Thug Life) படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருட்டுந்தார். மேலும் இப்படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம் பரிமளா அண்ட் கோ (Parimala And Co). இப்படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் சஞ்சனா. அதில் அவர், லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) நடித்துள்ள டிசி திரைப்படம் (DC Movie) பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு அரை மணிநேரத்தில் முடிவுபண்ண விஷயம்.. எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி – சூர்யா பேச்சு!

டிசி திரைப்படம் குறித்து நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “டிசி படத்தில் வைரலாகிவரும் இசை மிகவும் நன்றாக இருக்கிறது. அத்துவும் அனிருத் சார் இயக்கத்தில் நான் நடிக்கும் முதல் படம் இது. நான் மிகப்பெரிய அனிருத் ரசிகை. இப்படத்தின் மீது ரொம்பவே ஆர்வமாக இருக்கு. டிசி படமானது முற்றிலும் மாறுபட்ட உலகமாக இருக்கும். இதற்க்கு முன்பு அருண் மாதேஸ்வரன் சார் பணியாற்றிய படங்களுக்கும் இப்படத்திற்கும் வித்தியாசம் இருக்கு. அவருக்கென ஒரு தனி உலகம் உண்டு.

இதையும் படிங்க: சும்மா ஜாலியா ஒரு மேட்ச்… இணையத்தில் வைரலாகும் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!

அதில் எனது முகத்தை பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது முதலில். பிறகு அகில் எனது கதாபாத்திரம் இணைந்திருக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கு. ஒரு படம் என்னை ஆர்வமாக்குகிறது என்ற அதில் நடிப்பேன், அது எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. இதுபோன்ற படங்கள் எனது படங்களின் லிஸ்ட்டில் நல்ல படம் என இடம்பெறுவதுபோன்ற படங்களில் நடித்துவருகிறேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.

நடிகை சஞ்சனா கிருஸ்ணமூர்த்தியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sanjana AK (@sanjkayy)

நடிகை சஞ்சனா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 28ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தை தொடர்ந்து சஞ்சனா, லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி நடித்துள்ள டிசி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, சஞ்சனா மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வைரலாகிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us