AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜயை போல ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததில்லை.. ஷூட்டிங்கில் எப்போதுமே அப்படிதான் – நடிகை மீனாட்சி சவுத்ரி பேச்சு!

Meenakshi Chaudhary Praises CM Vijay: கோலிவுட் சினிமாவில் தி கோட் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர், முதலமைச்சர் மற்றும் முன்னாள் நடிகருமான விஜய் குறித்து பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

விஜயை போல ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததில்லை.. ஷூட்டிங்கில் எப்போதுமே அப்படிதான் – நடிகை மீனாட்சி சவுத்ரி பேச்சு!
முதல்வர் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 May 2026 21:58 PM IST

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம்வருபவர் மீனாட்சி சவுத்ரி (Meenakshi Chaudhary). இவர் வெறும் நடிகை மட்டுமல்ல, பேட்மிட்டன் பிளேயரும் (Badminton) கூட. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவர் தமிழில் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் வெளியான கொலை (Kolai) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் வெளியாகியிருந்த சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே, தமிழில் தனது 3வது படத்திலே தளபதி விஜய்க்கு ( CM Thalapathy Vijay) ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம்தான் தி கோட் (The GOAT). இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்த நிலையில் தளபதி விஜய் காந்தி மற்றும் ஜீவன் என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் ஜீவன் என்ற வேடத்தில் நடித்திருந்த விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார்.

இப்படங்களை தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக சொல்லப்போனால், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் ஹிட் கொடுத்திருந்தார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த மீனாட்சி சவுத்ரி, முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய்யின் ஒழுக்கம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வெறும் 8 நாட்களில்.. தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது சூர்யாவின் கருப்பு திரைப்படம்!

முதல்வர் விஜய்யின் ஒழுக்கம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மீனாட்சி சவுத்ரி :

அந்த நேர்காணலில் நடிகை மீனாட்சி சவுத்ரி பேசுகையில், “விஜய் சாரை போல, ஒரு ஒழுக்கமான மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. காலையில் 7 மணிக்கு ஷாட் என்றால், 7 மணிக்கும் சரியாக ஸ்பாட்டில் இருப்பார். மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்பு கொடுப்பார். ஷூட்டிங்கில் ஆக்ஷ்ன் என்று சொல்லும்வரையில் அமைதியாக இருப்பார், அதற்கு பின் அப்படியே மாறிவிடுவார்.

இதையும் படிங்க: சூர்யா – ஜோதிகா பசங்க எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க… இணையத்தில் வைரலாகும் கியூட் ஃபேமிலி வீடியோ

தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் சாருக்கு, தேர்தல் நேரத்தில் வாழ்த்து அனுப்பியிருந்தேன். பதிலளிக்க சில நாட்கள் ஆகும் என நினைத்தேன். ஆனால உடனே தேங்க்யூ என மெசேஜ் அனுப்பியிருந்தார். நம்முடன் பணியாற்றிய நபர் ஒருவர், இவ்வளவு பேரியல் அளவிற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. அவர் வரலாற்றைப் படைத்துவருகிறார்” என அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.

நடிகை மீனாட்சி சவுத்ரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை மீனாட்சி சவுத்ரி, தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் புதிய தெலுங்கு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரிதான் நடித்துவருகிறாராம். இன்னும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us