AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: வெறும் 8 நாட்களில்.. தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது சூர்யாவின் கருப்பு திரைப்படம்!

Karuppu TN Box Office Collection: சூர்யாவின் நடிப்பு மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு. இப்படமானது வெளியாகி 8 நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Karuppu: வெறும் 8 நாட்களில்.. தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது சூர்யாவின் கருப்பு திரைப்படம்!
கருப்பு திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 May 2026 16:17 PM IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் 3வது திரைப்படமாக மற்றும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்ததுதான் கருப்பு (Karuppu). இப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) கருப்பசாமியாக நடித்திருந்த நிலையில், அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நாடிர்த்துள்ளார். இந்த ஜோடியானது கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலமாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படமானது நீதி, தெய்வீகம் மற்றும் அதிரடி ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்புகளை பெற்றுவருகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் எல்லாமே சிறப்பாக வந்துள்ளது.

கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், உலகளவில் 7வது நாட்களில் சுமார் ரூ 207 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் மட்டும் 8வது நாள் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து புது படங்களுக்கு கதை கேட்கும் சூர்யா… வைரலாகும் தகவல்

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 8 நாட்களில் கருப்பு படம் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகர் சூர்யாவின் கருப்பு படமானது 7வது நாளில் உலகமெங்கும் ரூ 207 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. வாரத்தின் இறுதியிலே திரையரங்குகளில் படங்கள் வரவேற்கப்படும் என்ற நிலையில், வார நாட்களிலே கருப்பு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்தின் இறுதியோடு இப்படமானது உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான எந்த படங்களும் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததில்லை.

இதையும் படிங்க: ராம் சரணுடன் சிறப்பு பாடலில் நடனமாடும் ஸ்ருதிஹாசன்.. வெளியானது ஹெல்லல்லல்லோ பாடல் புரோமோ வெளியீடு!

அந்த வகையில் கருப்பு படம் முதல் சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி செதுக்கியுள்ளார் என்று கூறலாம்,அதிலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின்போது நடிகர் சூர்யா கருப்பசாமியாக அவதாரம் எடுத்து நடனமாடிய காட்சிகள் உடம்பெல்லாம் சிலிர்க்கவைத்திருந்தது. இந்நிலையில் இப்படம் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us