Peddi Movie: ராம் சரணுடன் சிறப்பு பாடலில் நடனமாடும் ஸ்ருதிஹாசன்.. வெளியானது ஹெல்லல்லல்லோ பாடல் புரோமோ வெளியீடு!
Peddi Movie Hellallallo Song Promo: டோலிவுட் நடிகர் ராம் சரணின் நடிப்பில் 16வது திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளதுதான் பெத்தி. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் சிறப்பு நடனமாடுவதாக சமீபத்தில் வீடியோ கசிந்திருந்த நிலையில், தற்போது அந்த பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய மக்கள் மத்தியில் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் இறுதியாக இயக்குநர் சங்கரின் (Shankar) இயக்கத்தில் பிரம்மாண்டமான படத்தில் நடித்திருந்தார். கேம் சேஞ்சர் (Game Changer) என்று அழைக்கப்பட்ட இந்த படமானது 2025ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படம் ராம் சரணுக்கு தோல்வி திரைப்படமாகவே அமைந்தது. அந்த வகையில் இதையடுத்து இவர் நடிகராக நடித்துவந்த திரைப்படம்தான் பெத்தி (Peddi). இப்படம் ஆர்.சி.16 என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டுவந்த நிலையில், அதற்கு பிறகு பெத்தி என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ராம் சரண் விளையாட்டு வீரனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார்.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில், இப்படத்தில் ஸ்ருதிஹாசன் (Shrutihaasan) சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் இணையத்தில் கசிந்திருந்த நிலையில், இப்பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: சூர்யா – ஜோதிகா பசங்க எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க… இணையத்தில் வைரலாகும் கியூட் ஃபேமிலி வீடியோ
ராம் சரண் மற்றும் ஸ்ருதிஹாசனின் ஹெல்லல்லல்லோ பாடல் புரோமோ வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Sing with us #Hellallallo💃🕺💃💥💥
▶️https://t.co/fpyzcv79dd#Hellallallo Promo out now ❤️🔥 Full song grand launch at BHOPAL from May 23rd ✨️#PEDDI in cinemas worldwide on 4th June.#GetReadyForPeddi 💥💥
Mega Power Star @AlwaysRamCharan @NimmaShivanna #JanhviKapoor… pic.twitter.com/fLOcNHQjYW
— Mythri Movie Makers (@MythriOfficial) May 22, 2026
பெத்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் 3வது பாடலாக தயாராகியுள்ளதுதான் ஹெல்லல்லல்லோ. இப்பாடலில் ராம் சரண், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜான்வி கபூர் மூவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இதில் நடிகர் ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஹெல்லல்லல்லோ என்ற இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படலானது 2026ம் ஆண்டு மே 23ம் தேதியில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சலார் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – இயக்குநர் பிரஷாந்த் நீல் கொடுத்த அப்டேட்!
இப்படலானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகைகயில் கடந்த சில நாட்களுக்கும் முன் இதன் ட்ரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.