AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சலார் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – இயக்குநர் பிரஷாந்த் நீல் கொடுத்த அப்டேட்!

Salaar 2 Movie Shooting Update: தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் சலார். இப்படத்தின் பார்ட் 2 படமானது உருவாகும் என கூறப்பட்டுவந்தது. அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் பிரஷாந்த் நீல் உறுதிசெய்துள்ளார்.

சலார் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – இயக்குநர் பிரஷாந்த் நீல் கொடுத்த அப்டேட்!
பிரஷாந்த் நீல் மற்றும் பிரபாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 May 2026 15:05 PM IST

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ் (Prabhas). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தி ராஜா சாப் (The Raja Saab). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்திலே இப்படமானது வெளியிடப்பட்டிருந்தது. ஆக்ஷன் மற்றும் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குநர் சந்திப் வாங்காவின் (Sandeep Vanga) இயக்கத்தில் ஸ்பிரிட் (Spirit) என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த இயக்குநரின் இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற ஹிட் படங்கள் வெளியகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபாஸ் தற்போது இந்த இயக்குநரின் இயக்கத்தில் படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தை அடுத்ததாக இவர் சலார் 2 (Salaar 2) படத்தில் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. மேலும் சலார் 2 படமானது நடக்குமா?, நடக்காதா? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துவரும் நிலையில் சலார் 2 படம் உருவாகுவதை இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) உறுதிசெய்துள்ளார். மேலும் அவரின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து புது படங்களுக்கு கதை கேட்கும் சூர்யா… வைரலாகும் தகவல்

சலார் 2 திரைப்படம் குறித்து இயக்குநர் பிரஷாந்த் நீல் சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் இயக்குநர் பிரஷாந்த் நீல் பேசுகையில், “தற்போது உருவாகிவரும் ஜூனியர் என்டிஆர்- யின் டிராகன் பட ஷூட்டிங் முடிந்ததும், உடனே சலார் 2 படத்திற்கான பணிகள் தொடங்கும் என கூறினார். மேலும் கேஜிஎஃப் 3 படம் குறித்து பேசுகையில், எப்போது அப்படத்தில் கவனம் செலுத்தமுடியும் என எனக்கு தெரியாது. சலார் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன், அதுபோன்ற ஜானரில் உருவாகும் படங்களிலிருந்து விலக திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் இப்படிதான் இருக்குமாம் – வைரலாகும் தகவல்

கடந்த 20 ஆண்டுகளாக வண்ணமயமான ஒரு படத்தை இயக்கவேண்டும் என அவர் ஆசைப்பட்டிருந்தாராம். மக்கள் மனதிற்கு நெருக்கமான மற்றும் வண்ணமயமான படத்தை இயக்கவேண்டும் என்பதுர்தான் தனது நீண்டகால விருப்பம் என கூறியுள்ளார்.

சலார் 2 படம் குறித்து இயக்குநர் பிரஷாந்த் நீல் பேசியது தொடர்பான பதிவு:

கேஜிஎஃப் பட புகழ்பெற்ற இயக்குநராக இருந்துவருபவர் பிரஷாந்த் மேலே. இவர் கடந்த 2024ம் ஆண்டில் நடிகர் பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து, சலார் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷன் மற்றும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கேங்ஸ்டர்ஸ் படமாக இது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து சலார் 2 படம் உருவாகும் என கூறப்பட்ட நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் டிராகன் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை முடித்தகையோடு சலார் 2 படத்தை பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.

Follow Us