YYDF Movie: ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!
YYDF Movie Shooting Pooja: 2025ல் ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ருத்ரா. இவரின் நடிப்பில் 2வது படமாக தயாராகிவருவதுதான் யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ. இப்படத்தின் முதல் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பூஜையடன் தொடங்கியுள்ளது. இது குறித்த வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவர் சினிமாவில் எவ்வாறு நுழைந்தாரோ, அதை போலவே அவரின் உடன் பிறந்த சகோதரரான ருத்ராவையும் (Rudra) சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 2025ம் ஆண்டில் வெளியான ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக ருத்ரா அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தை வெற்றியை அடுத்ததாக மீண்டும் சினிமாவில் கதாநாயகனாகவே நடிப்பார் என்று அவர் இருந்த நிலையில், 2வது படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு படக்குழு “யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ” (Yellow Yellow Dirty Fellow) என டைட்டில் வைத்துள்ளது. இதை விஷ்ணு விஷால் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கிருஷ்ணா ராம்குமார் (Krishna Ramkumar) இயக்கிவருகிறார்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றியிருந்தது. இதில் ருத்ர நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங்கும் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், அதன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: கருப்பு பட கடைசி 10 நிமிடம்.. சூர்யா கொளுத்திட்டாரு – பெருமையாக பேசிய ஜோதிகா!
யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ படத்தின் ஷூட்டிங் பூஜா வீடியோ பதிவு:
Not just a pooja…
This was a full-on gathering of the Yellow Fellows 💛#YYDFMovie Title Teaser out now ▶️ https://t.co/bWV74c8qzS@APIfilms @VVStudioz @TheActorRudra @PreethiOffl @VikkieBhaskar @itshravanthi @bharathsankar12 @editorNash @veeramani_art @navaarajkumar @viyaki_s… pic.twitter.com/SlHeYUyUzt— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) May 21, 2026
யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ படமானது முழுக்க இந்த காலத்திற்கு என்ற மார்டன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுவென்சார்ஸ் இருவருக்கும் இடையே எவ்வாறு காதல் மலர்கிறது, இவர்களின் காதலில் எவ்வாறு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தயாராகிவருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இதன் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: அந்த நேரத்தில் சிவா ரொம்பவே கஷ்டப்பட்டாரு.. இப்போது அவரை நினைத்தால் பெருமையாக இருக்கு – சந்தோஷ் நாராயணன்!
இதில் ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் ஜோடியாக நடிக்க, அவர்களுடன் நடிகர் கருணாகரனும் இணைந்து நடித்துவருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாரத் குமார் இசையமைக்கும் நிலையில், படத்தின் பாடல்களும் சிறப்பாக தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்துவிடும் என க்கூறப்படுகிறது. அதையடுத்து 2026ம் ஆனது இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.