YYDF Movie: ருத்ராவின் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ படத்தின் டீசர் வெளியீடு!
Yellow Yellow Dirty Fellow Movie Teaser: நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ராவின் நடிப்பில் 2வது தயாராகியுள்ள படம்தான் யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ. தற்போது இப்படத்தின் டீசரை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளனர். தற்போது இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan baby) என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ருத்ரா (Rudra). இவர் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) உடன்பிறந்த சகோதரர் ஆவார். அறிமுக இயக்குநர் கிருஷ்ணா ராம்குமார் இயக்கியிருந்த நிலையில், விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படமானது கடந்த 2025ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர் இரண்டாவதாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் “யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ” (Yellow Yellow Dirty Fellow). இந்த புதுப் படத்தையும் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் (Vikkie Bhaskar) என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், இதன் முதல் டீசர் இன்று 2026 மே 20ம் தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரை ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: ஜெஸ்ட் காட் திங்ஸ்.. கருப்பு திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை திரிஷா!
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ படத்தின் டீசர் குறித்த எக்ஸ் பதிவு:
This pair is all set to take over your feeds, likes and hearts 🤙
Title Teaser of Yellow Yellow Dirty Fellow is here!#YYDFMovie ▶️ https://t.co/pAARSPa1iY
A film by @VikkieBhaskar, coming to theatres in 2026.@APIfilms @VVStudioz @TheVishnuVishal @TheActorRudra @PreethiOffl… pic.twitter.com/Jr3carykRS
— venkat prabhu (@vp_offl) May 20, 2026
இந்த யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ பட டீசரில், இரு குழந்தைகள் சிறுவயதிலிருந்து பெஸ்ட்டாக வளர்க்கிறார்கள். பின்ன சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி, சோசியல் இன்ஃபுளுவென்சர்ஸ் ஆக மாறுகிறார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் எவ்வாறு ஒன்னு சேருகிறார்கள். சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றிய ஒரு ஜாலியன் காதல் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: ஆன்மிக பாதையில்.. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ரவி மோகன்!
யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ படத்தை இயக்குநர் விவேக் பாஸ்கர் இயக்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாரத் சங்கர் என்பவர் இசையமைத்துவருகிறார். இப்படமானது முற்றிலும் காதலை மையமாக கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் ருத்ரா ஹீரோவாக நடித்துள்ள நிலையில், கிஸ், அயோத்தி, 29 போன்ற படங்களில் நடித்திருந்த நடிகை பிரீத்தி அஸ்ரானிதான் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறலாம்.