Karuppu: ஜெஸ்ட் காட் திங்ஸ்.. கருப்பு திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை திரிஷா!
Trisha Shares Karuppu BTS Photos: கடந்த 2026 மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி வெற்றிபெற்றுவரும் திரைப்படம்தான் கருப்பு. இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட BTS வீடியோ மற்றும் புகைப்படங்களை திரிஷா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) மாஸ் இயக்கத்தில், மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா (Suriya) நடித்திருந்த நிலையில், அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இப்படத்தில் திரிஷா வழக்கறிஞர் “ப்ரீத்தியாக” நடித்திருந்தார். இப்படத்தில் நீதிக்காக்க நீதிமன்றத்தை நாடும் கருப்பசாமியாக சூர்யா நடித்துள்ளார். இப்படமானது சொல்லப்போனால் பக்தி திரைப்படமாக தற்போதுள்ள தொழில்நுட்பங்களை வைத்து இயக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். இப்படத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மெயின் வில்லனாக நடித்துள்ள நிலையில், இவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கம் ஒருபுறம் இருந்தாலும், சூர்யாவின் நடிப்பு அவ்வளவு அருமையாக இப்படத்தில் அமைந்தது என்று கூறலாம்.
மேலும் திரிஷாவும் இப்படத்தில் வெறும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். குருவி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களுக்கும் பிறகு திரிஷா மிகவும் ஜாலியான கேரக்டரில் இப்படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோவை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஆவணப்படம் கிளாடியேட்டர்ஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?
கருப்பு படத்தின் ஷூட்டிங் BTS புகைப்படங்களை திரிஷா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை திரிஷா சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் காட் மோட் பாடலில் தனது நடனம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இப்பதிவில், “என் மாயாஜால மே சொன்னது வெற்றிக்கு இன்னொன்று இவை எல்லாம் இறைவனின் செயல்கள்” என அதில் கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆர்-யின் பர்த்டே.. டிராகன் பட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
திரிஷாவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியான முதல் படமாக கருப்பு அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படம் வெற்றிபெற்று சிறப்பாக திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. மேலும் 2026ம் ஆண்டில் பெரிதாக திரிஷா எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. தமிழில் கருப்பு படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்திருந்தார். இதில் கருப்பு படமானது வெளியான நிலையில், சிரஞ்சீவியுடன் நடித்த விஸ்வம்பரா படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமும் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகி திரிஷாவுக்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.