AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சும்மா ஜாலியா ஒரு மேட்ச்… இணையத்தில் வைரலாகும் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!

Ajith Kumar Playing Cricket Video goes viral on social media | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து கார் ரேஸிங் பணிகளில் பிசியாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

சும்மா ஜாலியா ஒரு மேட்ச்… இணையத்தில் வைரலாகும் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2026 12:43 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் எந்த சமூக வலைதளத்திலும் தனக்கு என்று ஒரு பக்கம் இல்லாமல் இருக்கிறார். இதன் காரணமாகவே இவர் தொடர்பான எந்த புகைப்படம் மற்றும் வீடியோவை மற்ற யார் வெளியிட்டாலும் அது தொடர்ந்து ரசிகர்களிடையே பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி முன்பு எல்லாம் படங்களை தவிர நடிகர் அஜித் குமாரை பெரிய அளவில் பொது இடங்களில் பார்க்கவே இயலாது. அவர் அவருடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள மாட்டார். மேலும் மற்ற எந்த சினிமா நிகழ்வுகளிலும் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது ப்ரைவசியை மெயிண்டன் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாகிராம் ஒரு பக்கத்தை ஓபன் செய்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து தனது கார் ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பு கார் ரேஸிங் என இரண்டிலும் படு பிசியாக இருக்கும் நடிகர் அஜித் குமார் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ:

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அவரது நண்பர்கள் உடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நடிகர் அஜித் குமார் ஃபீல்டிங் செய்தது மற்றும் பேட்டிங் செய்தது என இரண்டுமே இருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அதிக அளவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் இப்படிதான் இருக்குமாம் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்திலிருந்து வெளியானது அது தலோரே வீடியோ பாடல்!

Follow Us