AR Murugadoss: முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
Director AR Murugadoss Meets CM Thalapathy Vijay : தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்தவருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் மிக பிரம்மாண்ட உச்சத்தை எட்டிய இயக்குநர்தான் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவையும் கடந்து பாலிவுட் சினிமாவிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் அமீர்கான், சல்மான்கான் (Salman Khan), தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் சூர்யா (Suriya) உட்பட பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தமிழில் இவருக்கு 7ஆம் அறிவு, துப்பாக்கி, கஜினி மற்றும் சர்கார் போன்ற படங்களும் வெற்றியாக அமைந்தது. இவர் இறுதியாக தமிழில் மதராஸி (Madaraasi) என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இறுதியாக கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளை வசூலித்திருந்தது. இந்நிலையில், இன்று 2026 மே 23ம் தேதியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழக முதலமைச்சர் தளபதி விஜயை (Chief Minister Vijay) நேரில் சந்தித்து, பூங்கோத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் – தளபதி விஜய்!
முதலமைச்சர் விஜயை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சந்தித்தது தொடர்பான பதிவு:
#ARMurugadoss met & greeted our chief CM Vijay. pic.twitter.com/msaCeEOBei
— Flim Updates⚕️ (@Dasarathan_1720) May 23, 2026
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தளபதி விஜய் கூட்டணி:
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தளபதி இருவரும் முதல் முறையாக இணைந்த கூட்டணி படம் என்றால் அது துப்பாக்கி. இப்படத்தில் தளபதி விஜய் ராணுவ வீரனாக நடித்து அசத்தியிருந்தார். இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், சிறப்பான மற்றும் சூப்பர் ஹிட் படமாக இப்படமானது அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, 2 ஆண்டிலே கத்தி என்ற படத்தின் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. இப்படமும் அரசியல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற கதைக்களத்தில் தயாராகியிருந்தது.
இதையும் படிங்க: கருப்பு படத்தை அவர்களுக்காகதான் உருவாக்கினேன் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
மேலும் அடுத்த இரண்டாவது ஆண்டில் (2018) வெளியான திரைப்படம் சர்கார். இப்படமானது முழுக்க முழுக்க அரசியல் மற்றும் மக்களின் வாக்குரிமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வெளியான 3 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டுதான். இத்தியது மீண்டும் இந்த கூட்டணி இணைய நினைத்த நிலையில், அதற்குள் தளபதி விஜய் அரசியலில் இறங்கி தற்போது, தமிழக முதல்வராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்தியுள்ளார்.