AR Murugadoss : ஹாரர் படம்… கதை என்னிடம் இருக்கிறது – ஏ.ஆர். முருகதாஸ்!
AR Murugadoss About Future Movie Plans : கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் மதராஸி படமானது வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் நேர்காணல் பேசிய அவர், தன்னிடம் உள்ள ஸ்கிரிப்ட் குறித்துப் பேசியுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர் .முருகதாஸ் (AR. Murugadoss) தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர். இவரின் இயக்கத்தில் அ ஜித் குமார் (Ajith kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இவர் தளபதி விஜய்யுடன் துப்பாக்கி மற்றும் கத்தி இரு படங்களை இயக்கியிருக்கிறார். இதை அடுத்து வாய்ப்பு கிடைத்தால் தளபதி விஜய்யுடன் துப்பாக்கி 2 படத்தையும் இயக்குவதாகவும் கூறியிருக்கிறார். இவர் இந்தியிலும் சல்மான்கான் மற்றும் அமீர்கான் என இரு நடிகர்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் மதராஸி (Madharaasi) . இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்திருக்கிறார்.
இப்படமானது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், தான் வைத்திருக்கும் புதுவிதமான படங்களின் ஸ்கிரிப்ட் குறித்துப் பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : காந்தாரா 2வில் குல்ஷனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!
தான் வைத்திருக்கும் புதிய படங்களின் ஸ்கிரிப்ட் பற்றிப் பேசிய ஏ.ஆர். முருகதாஸ்
அந்த நேர்காணலில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம், ஆக்ஷன் படங்களைத் தவிர்த்து மற்ற படங்களை இயக்குவதற்கு ஐடியா இருக்கிறதா என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ் , ” சினிமாவில் கமர்ஷியல் என்ற வழியில் இயக்குநர்கள் சென்றுவிட்டால், அதிலிருந்து மீள்வதற்குக் கடினமாக இருக்கும். மணிரத்னம் சார் போல உள்ள இயக்குநர்கள், அது வேண்டாம் என சுலபமாக மாற்ற முடியும். ஆனால் மற்ற இயக்குநர்கள் மாறுவது கடினம்தான் என கூறினார். மேலும் தொகுப்பாளர் நீங்கள் எப்போது கமர்ஷியல் இல்லாத படத்தை இயக்கப்போகிறீர்கள்? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க : தமிழில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சசிகுமார்தான் – இயக்குநர் முத்தையா பேச்சு!
ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
A special sneak peek into the making of #Madharaasi 🔥
Just 25 DAYS TO GO before the show begins in theatres!
pic.twitter.com/jqZ23DdsiS— A.R.Murugadoss (@ARMurugadoss) August 11, 2025
அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ், ” விரைவில் பண்ணுவேன். எனக்கு முழுவதுமாக புது முகங்களை வைத்து ஒரு படம் பண்ணவேண்டும் என ஆசை அதிகம். உண்மையிலேயே ஒரு பேய் படம் எடுக்கவேண்டும் என ஆசை, ஒரு சாமி படம் எடுக்க வேண்டும் என ஆசை. இந்த படங்களுக்கு எல்லாம் என்னிடம் கதைகள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அடல்ட் ஒன்லீ படத்திற்குக் கூட என்னிடம் கதை இருக்கிறது. எல்லாம் நகைச்சுவையான கதைக்களம் கொண்டதுதான், வன்முறையாக எதுவும் இருக்காது” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபனாக பேசியிருந்தார்.