Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kantara 2 : காந்தாரா 2வில் குல்ஷனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!

kantara 2 Movie Update : பான் இந்திய மொழிகளில் உருவாகி, வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம்தான் காந்தாரா 2. இப்படத்தை நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி உருவாக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் குல்ஷன் தேவ்வையாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kantara 2 : காந்தாரா 2வில் குல்ஷனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!
காந்தாரா 2 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Aug 2025 17:13 PM

தென்னிந்திய சினிமாவில் இந்த 2025 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களில் ஒன்று காந்தாரா 2 (Kantara 2). இந்த படமானது கன்னட மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் நிலையில், இதை இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) உருவாக்கியுள்ளார். இப்படத்தை அவரே இயக்கி, அவரே முன்னணி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த காந்தாரா 2 திரைப்படமானது, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா 1 என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கியுள்ளதாம். இப்படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை  ருக்மிணி வசந்தின் (Rukmini Vasanth) கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் வெளியானது. அதை தொடர்ந்து நடிகர் குல்ஷன் தேவையாவின் (Gulshan Devaiah) கதாபாத்திர அறிமுக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் குல்ஷன் தேவையா ” குலஷேகரன்” (KULASHEKARA) என்ற வேடத்தில் நடித்துள்ளாராம். தற்போது வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்? இயக்கப்போகும் மாஸ் இயக்குநர்.. புது தகவலால் அதிரும் கோலிவுட்!

நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்ட குல்ஷன் தேவையாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் :

இந்த காந்தாரா 2 படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய நடிகையாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் கனகவல்லி என்ற வேடத்தில் நடித்துள்ளார். நடிகை ருக்மிணி வசந்த் ஏற்கனவே தமிழில் , நடிகர் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகக் காத்திருக்கும் மதராஸி படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து, இவர் காந்தாரா 2 படத்திலும் நடித்துள்ள நிலையில், இவரின் நடிப்பில் எக்கச்சக்க படங்கள் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

இதையும் படிங்க : வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தது தலைவன் தலைவி… படக்குழு வெளியிட்ட போஸ்டர்

காந்தாரா 2 படத்தின் எதிர்பார்ப்பு ;

காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங்கின்போது, கிட்டத்தட்ட 3 படக்குழுவினர்கள் எதிர்பாராதவிதமாக இறந்தனர். இதனால் இப்படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிக்கொண்டே போனது என்று கூறலாம். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூலை மாதத்தின் இறுதியில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டின் போதுதான் தமிழில், தனுஷின் இட்லி கடை படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.