வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தது தலைவன் தலைவி… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
Thalaivan Thalaivii Movie: கோலிவுட் சினிமாவில் இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகின்றது.

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நாயகனாக நடித்து கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்கி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் இவரது படங்கள் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியது. இறுதியாக சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இவரது இயக்கத்தில் எந்தப் படமும் வெளியாகாமல் இருந்தது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் பண்டிராஜ் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் டார்க் காட்சிகள் நிறைந்த படங்களில் வரத்து அதிகமானதால் இனி ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் ஓடாது. பாண்டிராஜ் ஃபீல்ட் விட்டு போகிற நேரம் வந்துடுச்சுனு அவரின் காதுபடவே பலர் பேசியதாக தெரிவித்தார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள தலைவன் தலைவி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தது தலைவன் தலைவி:
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும் நடித்து இருந்த இந்தப் படம் முழுக்க முழுக்க தற்போது சமூகத்தில் நிலவும் குடும்ப சூழலை மையமாக வைத்து வெளியாகியுள்ளது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் பாசம், கோபம் என அனைத்து உணர்வுகளையும் மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். காமெடி செண்டிமெண்ட் என ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக படத்தின் வெற்றி விழாவைப் படக்குழு கொண்டாடிய நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளது குறித்து ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… சூர்யாவின் 47-வது படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுதான்… வைரலாகும் தகவல்
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
25 Days of Families’ Favourite Mega Blockbuster ❤️#ThalaivanThalaivii – the celebration continues in theatres!@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor @MynaNandhini… pic.twitter.com/mxJJLnlIUa
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 19, 2025
Also Read… நடிகை சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து பட இயக்குநர்!