சூர்யாவின் 47-வது படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுதான்… வைரலாகும் தகவல்
Actor Suriya: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கருப்பு மற்றும் சூர்யா 46 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவனுடன் இணைந்துள்ளார்.

நடிகர் சூர்யா (Actor Suriya) தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு படத்தில் இணைந்தார். இந்தப் படத்திற்கு சூர்யா 45 என்று முன்பு பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் பண்டிகை காலத்தில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதன்படி படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் படம் தீபாவளிக்கு வெளியாகுமா அல்லது 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகுமா என்பது படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்தான் தெரியவரும். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் தற்போது கூட்டணி வைத்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யா 46 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




சூர்யா 47 குறித்து இணையத்தில் வைரலாகும் மாஸ் தகவல்:
இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக இயக்குநர் ஜீத்து மாதவனுடன் இணைய உள்ளதாக முன்பு தகவல்கள் வெளியானது. இவர் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கிறார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆவேஷம் படத்திற்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also Read… எல்லாத்துக்கும் சாண்டி மாஸ்டர்தான் காரணம் – நடிகர் சௌபின் ஷாகிர்!
நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you team ❤️ https://t.co/lIuQxBxwIi
— Suriya Sivakumar (@Suriya_offl) July 31, 2025
Also Read… ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்… கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!