சூர்யாவின் 46வது படத்தில் நடிக்கும் அனிமல் நடிகர்?
Suriya46 Movie Update : தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் புதியதாக உருவாகிவரும் படம் சூர்யா46. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் யார் என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). கடந்த 2025, மே மாதத்தில் வெளியான இப்படமானது சூர்யாவிற்குப் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்திருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பின், சூர்யாவின் நடிப்பில் வெளியான வெற்றிப் படமாகவும் இது அமைந்திருந்தது. இதை அடுத்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu) என்ற திரைப்படத்தில் இணைந்தார். இப்படமானது முற்றிலும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அடுத்து நடிகர் சூர்யா தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்தார். இப்படமானது சூர்யா46 என்ற தற்காலிக டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் வேறு யாருமில்லை, அனிமல் திரைப்படத்தின் ரன்பீர் கபூரின் தந்தையாக நடித்த, அனில் கபூர்தான் (Anil Kapoor). சூர்யா46 படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு இது குறித்து எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.




இதையும் படிங்க : அட்டகத்தி தினேஷ் – கலையரசனின் ‘தண்டகாரண்யம்’ பட ரிலீஸ் அப்டேட்!
சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா46 படக்குழு வெளியிட்ட பதிவு :
Wishing the one and only, never-aging and forever young, Our dearest @Suriya_offl garu a fantastic birthday! 🤩 – Team #Suriya46
Your passion and presence light up every frame. 🌟#HBDSuriyaSivakumar #HappyBirthdaySuriya #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena… pic.twitter.com/l2mcm1RuZW
— Sithara Entertainments (@SitharaEnts) July 23, 2025
இந்த சூர்யா 46 படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. இப்படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது, ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாலிவுட் நடிகர் அனில் கபூரும் இணைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மிகப் பிரம்மாண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அரசியல் பத்தி என்னிடம் கேட்காதீங்க.. ஸ்ருதி ஹாசன் பேச்சு!
சூர்யா46 பட டைட்டில் அப்டேட் :
இந்த படமானது தற்போது தற்காலிகமாக சூர்யா46 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது சைன்ஸ் மற்றும் காதல் என மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். இப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாககொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்குப் படக்குழு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகிறது . இந்நிலையில், விரைவில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.