Shruti Haasan : அரசியல் பத்தி என்னிடம் கேட்காதீங்க.. ஸ்ருதி ஹாசன் பேச்சு!
Shruti Haasan About Politics : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இவரின் நடிப்பில் சமீபத்தில் கூலி படம் வெளியானது. இந்நிலையில், நேரங்கானல் ஒன்றில் பேசிய அவர், அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), தனது தந்தையைப் போல, சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் 3 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியிருக்கும் படம்தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், ப்ரீத்தி என்ற வேடத்தில் இவர் நடித்திருந்தார். இவர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த முதல் படம். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்துடன் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பின் ஸ்ருதி ஹாசன் நடித்த படமாகவும் இது அமைந்துள்ளது.
இந்நிலையில், இதனையடுத்து இவர் தெலுங்கில் சலார் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கூலி படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் தொகுப்பாளர் கமல்ஹாசனின் அரசியல் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன், “அரசியல் பத்தி என்ன கேக்காதீங்க” என அந்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : தளபதி விஜய்யின் ‘லியோ’ வசூலை முந்தியதா ‘கூலி’?… 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அரசியல் குறித்த கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் கூறிய பதில் :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஒருவர், நடிகை ஸ்ருதி ஹாசனிடம், கமல்ஹாசனின் எம்.பி பதவி குறித்தும், அவரின் அரசியல் நுழைவு குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், அரசியல் பத்தி என்ன கேக்காதீங்க என கூறியிருந்தார். மேலும் அப்பா கமலின் அரசியல் நுழைவு பற்றி உங்கள் ரியாக்ஷ்ன் என்ன என்றும் கேட்டார். அதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன், “அரசியல் பத்தி என்னிடம் பேசாதீங்க ” என மீண்டும் கூறினார்.
இதையும் படிங்க : ‘இட்லி கடை’ படத்தில் தனுஷின் தங்கையாக நடிக்கும் அர்ஜுன் ரெட்டி பட நடிகை?
தொடர்ந்து பேசிய ஸ்ருதி ஹாசன், “எனக்கு அரசியல் பற்றி ஒன்னும் தெரியாது. எனது தந்தை இருப்பதால், அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். அப்பாவிற்கு எல்லா விஷயங்களும், தெரியும் , ஆனால் நான் அரசியல் குறித்து எதுவும் பேசமுடியாது. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. மேலும் அப்பா ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்றால், அதை விடாமுயற்சியுடன் செய்வார். மேலும் அவருக்கு நான் ஒரு மகளாக, துணைநிற்கவேண்டும் என்பது எனது கடமை” என நடிகை ஸ்ருதி ஹாசன் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
நடிகை ஸ்ருதி ஹாசன் கூலி படத்தை அடுத்து, தமிழில் ட்ரெயின் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மிஷ்கினின் இயக்கத்தில் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகை ஸ்ருதி ஹாசன், சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றிலும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.