AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

With Love: 4வது வாரத்திற்கு பிறகும் திரையரங்குகளில் சாதனை படைத்த வித் லவ் திரைப்படம்!

With Love Movie: நடிகரும், இயக்குநருமான அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியான படம் வித் லவ். இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 4 வாரங்களான நிலையில், இன்னும் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போதும் கிட்டத்தட்ட 125 திரைகளுக்கும் மேல் வெளியாகி சாதனைப் படைத்துவருகிறது.

With Love: 4வது வாரத்திற்கு பிறகும் திரையரங்குகளில் சாதனை படைத்த வித் லவ் திரைப்படம்!
வித் லவ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Feb 2026 14:48 PM IST

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் வித் லவ் (With love). இந்த படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் இப்படத்தின் மூலமாக தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமானது முற்றிலும் பள்ளிப்பருவ காதல், காமெடி மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தின் கலவையாகவே வெளியாகியிருந்தது. இந்த சிறப்பான படத்தை ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்திருந்தார். இப்படமானது கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிவந்த நிலையில், மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தது. இந்நிலையில் இப்படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 4 வது வாரத்தை கடந்துள்ளது.

இந்நிலையிலும் இப்படமானது கிட்டத்தட்ட 125-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வாரங்களை கடந்தும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவருகிறது என்பது இதிலே தெரிகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா !

வித் லவ் திரைப்படத்தின் 4வது வாரத்தை கடந்தது குறித்த எக்ஸ் பதிவு:

வித் லவ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது இருக்கும் :

இந்த வித் லவ் படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலமாக சினிமாவிப்பில் நுழைந்த நிலையில், அந்த படத்திலே சிறு வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரும் கிட்டத்தட்ட பிரதீப் ரங்கநாதனின் பாணியை பின்பற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சில நேரங்களில் பாரமாக உணரும் உலகில், இந்தப் படம் நம்பிக்கையைப் போல உணர்ந்தேன்… தாய் கிழவி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் அட்லி

இவரின் வித் லவ் படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், திரையரங்குகளில் 4 வரங்களை கடந்தும் திரையிடப்பட்டுவருகிறது. தற்போது புது திரைப்படங்கள் இறங்கியுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படமானது திரையிடப்படுவது குறையும் என கூறப்படுகிறது. இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் முதல் வாரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us