Shalini Pandey : ‘இட்லி கடை’ படத்தில் தனுஷின் தங்கையாக நடிக்கும் அர்ஜுன் ரெட்டி பட நடிகை?
Idly Kadai Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் இயக்கத்தில் 4வதாக உருவாகியுள்ள படம் இட்லி கடை. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்திலிருந்து அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா (Kuberaa). இந்த படமானது தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார். இந்தப் படமானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாவிட்டாலும், தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தமிழில் இயக்கி, நடித்திருக்கும் படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படமானது தனுஷின் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியிருக்கிறது. இந்த படம் முற்றிலும் கிராமத்துக் கதைக்களம் கொண்ட படமாகத் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 2025, அக்டோபர் 1 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், இந்த படத்தில் நடிகை ஷாலினி பாண்டே (Shalini Pandey), தனுஷின் தங்கை வேடத்தில் நடித்திருக்கிறாராம். இவர் ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி என்ற இடத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படங்க : ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்… கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!
இட்லி கடை படக்குழு வெளியிட்ட ப்ரோமோஷன் தொடர்பான பதிவு
Up and running 🔥🧨#IdliKadai – Standees and banners are at your favorite theatres now
Steaming our way to cinemas on October 1st worldwide🌎@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth… pic.twitter.com/JniP8fcQyJ
— DawnPictures (@DawnPicturesOff) August 16, 2025
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி, பான் இந்திய அளவில் மிகவும் பிரபலமான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தில், விஜய் தேவரகொண்டா முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக, நடிகை ஷாலினி பாண்டே நடித்திருந்தார்.
இதையும் படிங்க : சேகர் கம்முலா படத்திற்காக 3-வது முறையாக இணையும் நானி – சாய்பல்லவி கூட்டணி? வைரலாகும் தகவல்
இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை அடுத்து தமிழ்ப் படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் தனுஷின் இட்லி கடை படத்திலும் இவர் நடித்து வருகிறார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் இவர் தனுஷின் தங்கை வேடத்தில் நடித்துள்ளாராம்.
இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
தனுஷின் இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 1 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2025, செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுவரை படத்தின் முதல் பாடல் மட்டும் வெளியாகியிருக்கும் நிலையில், விரைவில் படத்தின் இரண்டாவது பாடல், டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.