Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sasikumar : மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி – சசிகுமார் நெகிழ்ச்சி!

Sasikumar Instagram Viral Post : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சசிகுமார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் கிராமப் புறங்களில் பஞ்சாயத்துத் தலைவர்களை வைத்து தேசிய கோடி ஏற்றிய மாற்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பை பெற்று வருகிறது.

Sasikumar : மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி –  சசிகுமார் நெகிழ்ச்சி!
நடிகர் சசிகுமார்
Barath Murugan
Barath Murugan | Published: 16 Aug 2025 19:12 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வருபவர் சசிகுமார் (Sasikumar). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற திரைப்படம் நந்தன் (Nandhan). இந்த படத்தில் நடிகர் சசிகுமார் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் இரா. சரவணன் (Era. Saravanan) இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருடன் நடிகர்கள் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சரவணன் சக்தி மற்றும் நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் சார்ந்த கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சசிகுமார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த, பஞ்சாயத்துத் தலைவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு எவ்வாறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த 2025 ஆம் ஆண்டு 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக கிராமப்புறங்களில் உள்ள தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். இந்த மாற்றத்திற்கு, நந்தன் படக்குழுவின் சார்பாக நடிகர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கூலி vs வார் 2.. வசூலில் முந்தியது யார்? – வெளியான அப்டேட்!

நடிகர் சசிகுமார் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by M.sasikumar (@sasikumardir)

இந்த பதிவில் நடிகர் சசிகுமார், 79வது சுதந்திர தினத்தில் , தமிழ்நாட்டில் தற்போது பொறுப்புகளில் இருக்கும், தலித் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் அனைவரும் கொடியேற்றியுள்ளனர். இந்த மகத்தான மாற்றத்திற்காக, துணைநின்ற அனைவருக்கும், நந்தர் திரைப்படத்தின் சார்பில் நன்றிகள் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ – வெளியானது டீசர்!

சசிகுமாரின் புதிய திரைப்படம் :

சசிகுமாரின் நடிப்பில் இந்த 2025 ஆம் ஆனது வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படமானது இலங்கைத் தமிழர்களின் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சசிகுமாருடன் சிம்ரன் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025, மே மாதத்தில் வெளியானது. இந்த படத்தை அடுத்து ஃப்ரீடம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். இப்படமானது கடந்த 2025, ஜூலை 10ம் தேதியில் வெளியாகவிருந்தது. பின் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்ததாக நடிகர் சசிகுமார், புதியபடத்தை இயக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.