Dear Students Movie : நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ – வெளியானது டீசர்!
Dear Students Movie Teaser : நடிகர் நிவின் பாலியின் முன்னணி நடிப்பில் தயாராகியிருக்கும் படம் டியர் ஸ்டூடண்ஸ். இப்படத்தின் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா (Nayanthara) தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்திருக்கும், மலையாள திரைப்படம்தான் டியர் ஸ்டூடண்ஸ் (Dear Students). இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி (Nivin Pauly) கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் இருவரும் முதன் முறையாக இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பிரபல இயக்குநரான சந்தீப் குமார் (Sandeep Kumar) இயக்கியுள்ளார். இவர் பிரபல இந்தி இயக்குநர் ஆவார். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ள படம்தான் டியர் ஸ்டூடண்ஸ்.
இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதை அடுத்ததாக தற்போது இப்படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : மதராஸி படத்தின் கதை இதுதான்.. ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த விளக்கம்!
நடிகர் நிவின் பாலியின் டியர் ஸ்டூடண்ஸ் படத்தின் டீசர் :
‘Dear Students’ official teaser is out.
A film by @GeorgePhilipRoy & @Sandeepkumark1p, with the amazing #Nayanthara and a batch of newcomers as #DearStudents and I am happy to have joined the journey!@vineetjaintimes @PaulyPictures @Rowdy_Pictureshttps://t.co/G6SHR9Kwva
— Nivin Pauly (@NivinOfficial) August 15, 2025
இந்த டியர் ஸ்டூடண்ஸ் திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். கிட்டத்தட்டப் பள்ளி கதைக்களத்தில் இப்படமானது தயாராகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அசத்தல் காமெடி மற்றும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக இந்த டியர் ஸ்டூடண்ஸ்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நிவின்பாலி மற்றும் நயன்தாராவுடன் நடிகர்கள், ரெடின் கிங்ஸ்லி, ஷராஃயூதீன், அஜூ வர்கீஸ், தீப்தி, சுபத்ரா ராபர்ட், ஜானி ஆண்டனி என பல்வேறு பிரபலங்கள் இணைந்த நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : மாஸ் ஹிட்.. வசூலை வாரிக்குவிக்கும் கூலி.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?
டியர் ஸ்டூடண்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில், முதன் முறையாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, மே மாதத்தின் இறுதியில் நிறைவடைந்திருந்தது. இதை இப்படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருந்தனர். இதை அடுத்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை அடுத்ததாக இப்படமானது வரும் 2025, அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இது குறித்து எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.