Nivin Pauly : ‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக இணைந்த நிவின் பாலி! படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
Benz Movie Cast Update : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பிலும், எழுத்திலும் உருவாகிவரும் படம் பென்ஸ் . நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னணி நாயகனாக நடிக்கும் இப்படத்தை , இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்த்தில் இணையும் புதிய நடிகர் குறித்தான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸின் (Raghava Lawrence) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X) . இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj) இயக்கத்தில் வெளியான அந்த படத்தைத் தொடர்ந்து, காஞ்சனா 4, புல்லெட், கால பைரவா என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) எழுத்திலும் தயாரிப்பிலும், உருவாகிவரும் படம்தான் பென்ஸ் (Benz). இந்த படத்தை ரெமோ மற்றும் சுல்தான் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj kannan) இயக்கிவருகிறார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்ந்து, இப்படத்தை பூஜைகள் கடந்த 2025, மே மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இப்படத்தில் ராகவா லாரன்ஸை தொடர்ந்து முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பென்ஸ் படத்தில் நடிகர் ராகவா லாரன்சுடன், மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலியும் இணைந்துள்ளார். இந்த படத்தில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இது தொடர்பான அறிவிப்பு மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பென்ஸ் படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் பதிவு :
Meet #Walter, Our very own certified Baddie AKA @nivinofficial 💥
🔗 https://t.co/gwvlmEZY89#BenzCastReveal 🔥@offl_Lawrence @GSquadOffl @PassionStudios_ @TheRoute @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017 @bakkiyaraj_k @SaiAbhyankkar @gouthamgdop @philoedit @jacki_art pic.twitter.com/ns1MWSCg8k
— GSquad (@GSquadOffl) June 4, 2025
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநராகக் கைதி, மாஸ்டர் , விக்ரம் மற்றும் லியோ எனப் பல படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து படங்களை தயாரிப்பதிலும் இறங்கியுள்ளார். இந்நிலையில் இவரின் தயாரிப்பில் உருவாகிவரும் படம்தான் பென்ஸ். இந்த படத்தின் கதையையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் எழுதியுள்ளார்.
இந்த பென்ஸ் திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் , LCU லோகேஷ் சினிமெட்டிக் யுனிவர்ஸ் பட தொகுப்பில் இணையவுள்ளது. கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களின் வரிசையில் இந்த பென்ஸ் படமும் இணையுள்ளது. இந்நிலையில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலியும் இந்த தொகுப்பில் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர். மாதவனும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக வாத்தி பட நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது இது குறித்துப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவகம் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி கதைக்களத்துடன் உருவாகும் இந்த பென்ஸ் படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.