Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan : எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி- கமல்ஹாசன் பேச்சு!

Kamal Haasan ThanksThe People Of Tamil Nadu : தக் லைஃப் படத்தின் கன்னட ரிலீஸ் தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக தக் லைஃப் படத்தின் கர்நாடக ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், தனக்கு ஆதரவாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

Kamal Haasan : எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி- கமல்ஹாசன் பேச்சு!
கமல்ஹாசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jun 2025 16:34 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal haasan) . இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக தக் லைஃப் (Thug life)  படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், அதிரடி நாயகன் சிலம்பரசனும்  (silambarasan) முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2025, ஜூன் 5ம் தேதியில் ரிலீசாகிறது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு கடந்த 2025, மே 24ம் தேதியில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கன்னட மொழி (Kannada language)  குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து கன்னடத்தில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கர்நாடகா நீதிமன்றத்தில் கடந்த 2025, ஜூன் 3ம் தேதி விசாரணை நடைபெற்றது. இதில் கமல்ஹாசனிடம், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகா உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் எந்தவித மன்னிப்பும் கூறவில்லை, மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு அவகாசம் கேட்டுள்ளது தக் லைஃப் படக்குழு. இதைத் தொடர்ந்து இன்னும் இந்த கன்னட மொழி பிரச்சனை முடிவிற்கு வரவில்லை.

கமல்ஹாசன் பேச்சு :

மேலும் இது தொடர்ந்து சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், உணர்ச்சியோடு, தனக்கு ஆதரவாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி சொல்லவேண்டும். நான் மேடையில் பேசும்போது, உயிரே, உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தையும் நான் முழுமையாக உணர்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கமல் – சிம்பு தக் லைஃப் படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ், நாசர், திரிஷா, அபிராமி என பல்வேறு பிரபலங்கள் இந்த தக் லைஃப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் போன்ற பிரபலங்களும் அடித்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த தக் லைஃப் படம் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் இந்த படமானது கேங்ஸ்டர் மற்றும் மாஃபியா கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

இந்த படமானது 2025, ஜூன் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ் மொழியைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது. கன்னட மொழியில் மட்டும் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளியாக்குவதற்கு முன்னே பல சர்ச்சைகள், போராட்டங்களுடன் வெளியாகவிருக்கும் இந்த தக் லைஃப் ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.