Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வார இறுதி நாள்கள்..சொந்த ஊருக்கு செல்ல 725 சிறப்பு பேருந்துகள்..டிஎன்எஸ்டிசி அறிவிப்பு!

TNSTC Special Buses: வார இறுதி நாளையொட்டி, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 725 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் இயக்கம் குறித்த முழு விவரம் இதோ.

வார இறுதி நாள்கள்..சொந்த ஊருக்கு செல்ல 725 சிறப்பு பேருந்துகள்..டிஎன்எஸ்டிசி அறிவிப்பு!
வார இறுதி நாள்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Feb 2026 07:46 AM IST

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விடுமுறை நாள்களில் வெளியூர்களில் தங்கியிருந்து பணிபுரிந்து வரும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாகும். அவ்வாறு பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், வருகிற வார இறுதி நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து…

அதன்படி, சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ( கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்) திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 6) 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, நாளை மறுநாள் சனிக்கிழமை ( பிப்ரவரி 7) இதே பகுதியில் இருந்து 255 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: பணியின்போது கஞ்சா பயன்படுத்திய காவல்துறையினர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…

இதே போல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ஓசூர், வேளாங்கண்ணி, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 6) 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் சனிக்கிழமை சுமார் 20 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 725 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பொது மக்கள் வெளியூர் திரும்புவதற்கும் சிறப்பு பேருந்து

இதே போல, சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர் திரும்புவதற்கு வசதியாக மறு மார்க்கத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே, பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பேருந்துகளில் பயணிப்பதற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் WWW.TNSTC.IN என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தும், நேரடியாக பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் கவுண்டர்களின் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சட்டவிரோத ஊடுருவல்…வங்கதேசத்தினர் 24 பேர் கைது…மாநிலம் முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை!