AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டவிரோத ஊடுருவல்…வங்கதேசத்தினர் 24 பேர் கைது…மாநிலம் முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை!

24 Bangladeshis Arrested: திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தங்கியிருந்த 24 வங்கதேசத்தினரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது.தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத ஊடுருவல்…வங்கதேசத்தினர் 24 பேர் கைது…மாநிலம் முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை!
கோவை-திருப்பூரில் 24 வங்கதேசத்தினர் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Feb 2026 07:12 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான தனியார் நூற்பாலைகள், பனியன் நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஏராளமான வட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், வெளிநாட்டை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணிபுரிந்து வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கல்லூரி சாலை ரங்கநாதபுரம் எஸ். பி. நகரில் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், சந்தேகத்துக்கிடமான வகையில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த நூபுர் காட்டூன் (25 வயது, யாசின் மியா (26 வயது), முகமது இஸ்மாயில் (36 வயது), முகமது துகின் (40 வயது) ஆகியோர் என்பதும், இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

13 பேரை கைது செய்த கியூ பிரிவு போலீசார்

இதே போல, நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம், விஜயாபுரத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 9 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மொத்தத்தில் இந்த 13 பேரும் வங்கதேசத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததும், திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, இந்த 13 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க: ஆதரமில்லாத புகாரில் அஜித்குமார் அடித்துக்கொலை… நீதிமன்றம் வேதனை

கோவையில் 11 வங்கதேசத்தினர் கைது

இதேபோல, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அன்னூர் பகுதியில் வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கியூ பிரிவு போலீசார் மற்றும் அன்னூர் போலீசாருடன் இணைந்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர்கள் ஏஜெண்டுகள் மூலம் வங்க தேசத்தில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கும் சட்ட விரோதமாக அழைத்து வரப்பட்டு அன்னூர் நிறுவனத்தில் பணியில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

தமிழகம் முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை

இதை தொடர்ந்து, அந்த 11 வங்கதேசத்தினரையும் போலீசார் கைது செய்து சேலத்தில் உள்ள வங்கதேச அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இவர்களை சட்ட விரோதமாக அழைத்து வந்த ஏஜெண்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் கூறுகையில், தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் மேற்கு வங்க மாநிலத்தவர் போல ஆவணங்களை தயார் செய்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: பணியின்போது கஞ்சா பயன்படுத்திய காவல்துறையினர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Follow Us