காங்கோவில் சுரங்க விபத்து.. 200 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!
Congo Mine Accident Killed 200 | காங்கோவில் உள்ள சுரங்கம் ஒன்றில் விபத்து ஏற்பட்டு சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 200 பேர் பலியான நிலையில், மண்ணில் புதைந்துள்ள மேலும் பலர் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் சோகம் நிலவி வருகிறது.
பிராசவில்லி, பிப்ரவரி 01 : மத்திய ஆப்ரிக்காவின் (Central Africa) முக்கியமான நாடாக காங்கோ குடியரசு (Congo Republic) உள்ளது. இந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனிம சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில சட்டவிரோத கனிம சுரங்கங்களும் இதில் செயல்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, காங்கோவின் பல்வேறு பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் அந்த பகுதிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுத்து பிற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பாவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சுரங்கம்
காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள கொபா நகரில் கனிம சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஜனவரி 30, 2026 அன்று தொழிலாளர்கள் பலர் வேலை செய்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள், சுரங்கத்தை சுற்றி வேலை செய்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளனர்.
இதையும் படிங்க : France Hindu Temple: பிரான்சில் முதல் பாரம்பரிய இந்து கோவில் கட்டுமானம்.. BAPS வரலாற்று நிகழ்வு
விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 200 பேர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இந்த விபத்தில் மண்ணில் புதைத்து 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் மேலும் பலர் மண்ணுக்குள் புதைத்துள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மீட்ப்புகுழுவினர் அந்த பகுதியில் தொடர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. விமானங்கள் ரத்து!
சுரங்கம் இடிந்து விழுந்து 200 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.