நாளை நிகழும் முழு சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா?.. முக்கிய தகவல்கள் இதோ!
Full Solar Eclipse Will Happen On August 12 | சூரிய கிரகண நிகழ்வு அவ்வப்போது நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நாளை (ஆகஸ்ட் 11, 2026) முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிகவும் வியப்பூட்டும் மற்றும் அரிதான முழு சூரிய கிரகண (Full Solar Eclipse) நிகழ்வு நாளை (ஆகஸ்ட் 12, 2026) நிகழ உள்ளது. கிரீன்லாந்து, ஸ்பெயின், ஐஸ்லாந்து, போர்ச்சுகலில் இந்த சூரிய கிரகண நிகழ்வு காணப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாளை நிகழ உள்ல இந்த முழு சூரிய கிரகண நிகழ்வு எப்படி இருக்கும், அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா, இந்தியாவில் இருந்து இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியுமா என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை நிகழவுள்ள முழு சூரிய கிரகணம்
சூரியனுக்கும், பூமிக்கு இடையே நிலவு வரும்போது சூரியனின் முழு ஒளியும் மறைக்கப்படும். இதன் விலைவாக பகல் நேரத்திலே வானம் இருண்டு மாலை போல தோற்றம் அளிக்கும். அதாவது பூமிக்கும் ஒளி கொடுக்கும் மிகப்பெரிய சூரியனை அதனை விட அளவில் சிறியதாக உள்ள நிலவும் மறைக்கும்போது சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனா வளையம் மட்டுமே தோன்றும். இந்த நிகழ்வு தான் முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : காட்ஸில்லா எல் நினோ.. கடுமையான வெயில், வெப்ப அலை.. இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
எப்போதாவது அரிதாக நடைபெறக்கூடிய இந்த சூரிய கிரகண நிகழ்வு தான், நாளை (ஆகஸ்ட் 12, 2026) நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை காண வானியல் ஆய்வாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றனர். ஆனால், இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவின் எந்த பகுதியிலும் தெரியாது. காரணம், இந்த சூரிய கிரகணம் நடைபெறும்போது இந்தியாவில் இரவு வந்துவிடும்.
சூரிய கிரகணம் பயணிக்கும் பாதைகள்