AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராணுவத்தில் சேர்ந்த முதல் அரச குடும்ப பெண்.. டென்மார்ச் இளவரசி எடுத்த அதிரடி முடிவு!

Denmark Princess Isabella Joined Army | டென்மார்க்கில் விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கால கட்டாய ராணுவ பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் டென்மார்கின் இளவரசி இசபெல்லா இணைந்துள்ள நிலையில், அவர் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

ராணுவத்தில் சேர்ந்த முதல் அரச குடும்ப பெண்.. டென்மார்ச் இளவரசி எடுத்த அதிரடி முடிவு!
டென்மார்க் பிரின்சஸ் இசபெல்லா
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Aug 2026 23:56 PM IST

டென்மார்க், ஆகஸ்ட் 06 : டென்மார்க் (Denmark) இளவரசி இசபெல்லா, தன்னுடைய ராணுவ சேவையை தொடங்கியுள்ளார். அரசு குடும்பத்தை சேர்ந்தவர் ராணுவத்தில் சேறுவது இதுவே முதல் முறை ஆகும். தான் அரசு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை கருத்தில் கொள்ளாமல், இசபெல்லா தனது ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில், டென்மார்க் இளவரசி இசபெல்லா எடுத்த முக்கிய முடிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ராணுவத்தில் இணைந்த டென்மார்க் இளவரசி

டென்மார்க் மன்னர் பிரடெரிக் – ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான டென்மார்க் இளவரசி இசபெல்லா சமீபத்தில் தான் தனது உயர்நிலை படிப்பை முடித்தார். இந்த நிலையில் தான் அவர் டென்மார்கில் புதியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள 11 மாத கட்டாய ராணுவ சேவை திட்டத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.1ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை

ராணுவ பயிற்சியை தொடங்கிய இளவரசி இசபெல்லா

ஸ்லாகெல்சில் உள்ள கார்ட் ஹூசார் ரெஜிமென்ட் பிரிவில் பணியில் சேர்ந்து தனது ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளார். பெண்களை உள்ளடக்கிய, நீண்ட கால பயிற்சியை கொண்ட டென்மார்க்கின் கட்டாய ராணுவ பயிற்சி திட்டத்தில் அவர் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், அரச குடும்பத்தில் இருந்து முழுமையான கட்டாய ராணுவ சேவைக்கு உட்படும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Follow Us