AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!

Japan Centenarian Population: ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு லட்சத்தைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 1,07,677 பேர் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் நிலையில், இதில் 88% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.. சரிவடையும் பிறப்பு விகிதம்.. இரட்டை சவாலில் தவிக்கும் அரசு!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Sep 2026 10:35 AM IST

ஜப்பான், செப்டம்பர் 18: உலக அளவில் நீண்ட ஆயுளுடன் வாழும் மக்களின் நாடாகத் திகழும் ஜப்பான், மக்கள்தொகை வரலாற்றில் மற்றொரு மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அந்நாட்டில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட முதியவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 1 லட்சத்தைத் தாண்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. ஜப்பான் நாட்டின் சுகாதார, உழைப்பு மற்றும் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தொடர்ந்து 56-ஆவது ஆண்டாக ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!

முக்கியக் புள்ளிவிவரங்கள் மற்றும் பெண்களின் ஆதிக்கம்:

ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, நாட்டில் தற்போது 100 வயதை எட்டிய மற்றும் அதைக் கடந்து வாழும் முதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,677 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 7,914 பேர் அதிகமாகும். இந்தச் சாதனையில் பெண்களின் பங்களிப்பு மிக அசாத்தியமானதாக உள்ளது. மொத்தமுள்ள 1,07,677 (Centenarians) குடிமக்களில் சுமார் 88 சதவீதம் பேர் (94,298 பேர்) பெண்கள் ஆவர். ஜப்பானின் மிக மூத்த மூதாட்டியாக கியோட்டோவைச் சேர்ந்த 114 வயதுடைய ஃபுயோ கிஷிமோட்டோவும், மூத்த முதியவராக குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயதுடைய ஹிகாரு கட்டோவும் திகழ்கின்றனர்.

நீண்ட ஆயுளுக்கான ரகசியம், மருத்துவ முன்னேற்றம்:

ஜப்பானியர்களின் இந்த வியக்கத்தக்க நீண்ட வாழ்நாளுக்குப் பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடல் உணவுகள், காய்கறிகள் மற்றும் அரிசி அடங்கிய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுப் பழக்கம், தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் நடைப்பயிற்சி ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஜப்பானின் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளே முதியவர்கள் நோய்களின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகுத்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வெடித்து சிதறிய எரிமலை.. 50ஆயிரம் அடி உயர்ந்த சாம்பல்.. இந்தோனேஷியாவில் சம்பவம்

மறுபுறம் தொடரும் பிறப்பு விகிதச் சரிவு கவலை:

ஒருபுறம் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து சாதனை படைத்து வந்தாலும், மறுபுறம் நாட்டில் பிறப்பு விகிதம் கடுமையாகச் சரிந்து வருவது ஜப்பான் அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் ஜப்பானின் மொத்த மகப்பேறு விகிதம் வரலாற்றுச் சரிவாக 1.14 ஆகப் பதிவானது. 2008-ஆம் ஆண்டில் 12.8 கோடியாக இருந்த உச்சக்கட்ட மக்கள்தொகை, வரும் 2070-ஆம் ஆண்டில் 8.7 கோடியாகக் குறையும் என்றும், அப்போது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40% பேர் 65 வயதைக் கடந்த முதியவர்களாகவே இருப்பார்கள் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தை பேற்றைத் தவிர்த்து வருவதால், நாட்டின் எதிர்காலச் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பராமரிப்பு அமைப்புகளைத் தக்கவைப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Follow Us