Jana Nayagan: தங்கமே தளபதி.. முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்பட ஓடிடி ரிலீஸ் எப்போது? வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!
Jana Nayagan OTT Release Date: தமிழக முதலமைச்சர் விஜய் சினிமாவில் கடைசியாக நடித்திருந்த படம் ஜன நாயகன். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், வெற்றிநடைபோட்டுவந்தது. அந்த வகையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்ற நிலையில், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து தற்போது தமிழக அரசியலில் மாபெரும் தூணாக இருந்துவருபவர் முதலமைச்சர் விஜய் (CM Vijay). சினிமாவில் 33 கிட்டத்தட்ட ஆண்டுகள் இருந்த இவர், தற்போது மக்களுக்கான சேவைக்காக தமிழக அரசியலில் இறங்கி, தற்போது முதலமைச்சராக பதிவியேற்று தனது பணிகளை செய்துவருகிறார். இவர் சினிமாவில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இதை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தயாரித்திருந்தார். இந்த படமானது முதலில் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பிரச்சனையானது முடியும் முன்னே இணையத்தில் முழு படமும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையெல்லாம் கடந்து “ஏ” தர சென்சார் 2026 ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் திரையரங்குகளில் இப்படமானது வெளியானது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 4 வாரங்களான நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: இது ஒரு தமிழ் கிளாசிக்… புரிந்துகொள்பவர்களுக்கு ஒரு கவிதை – லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன்!
முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் :
இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்த திரைப்படம்தான் ஜன நாயகன். இதில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் நரேன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கிட்டத்தட்ட ரூ 270 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது.
இதையும் படிங்க: இயக்குநர் அருண் குமார் இயக்கும் படத்தை கமல் ஹாசனே தயாரித்து நடிக்கிறார்?
அந்த வகையில் கிட்டத்தட்ட 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் இப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜீ5 ஓடிடியில் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Thangamey! Thalapathy #Jananayagan is all set to meet you all on 21st August only on Zee 5🔥
The Hon’ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries… pic.twitter.com/4mwfq7fDcS
— Zee 5 Tamil (@ZEE5Tamil) August 17, 2026
ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ள நிலையில், அதன் தொலைக்காட்சி ரிலீஸ் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் பட ரிலீஸ் ஒத்திவைப்பிற்கு முன், ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.