Trisha Krishnan : சுகர் பேபி… திரிஷா ‘தக் லைஃப்’ படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Trisha Krishnan Salary InThug Life Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் தமிழில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதன் வகையில் மிக பிரம்மாண்டமாக ரிலீசிற்கு காத்திருக்கும் படம் தக் லைஃப். கமல்ஹாசன், சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள இதில் நடிப்பதற்கு திரிஷா பெற்ற சம்பளம் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டிலே இரு பிரம்மாண்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இந்த ஆண்டிலே நடிகர் அஜித்துடன் (Ajith ) விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என இரு பிரம்மாண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் மட்டும் இவரின் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படங்களைத் தொடர்ந்து, 4வதாக உருவாகிவரும் பிரம்மாண்ட படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையைக் கமல்ஹாசன் (Kamal Haasan) எழுத, படத்தைப் பிரபல இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் முன்னணி நாயகியாக நடித்துள்ள நிலையில், இப்படத்தில் நடித்ததற்கு அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?




இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை திரிஷா சுமார் ரூ. 12 கோடியைச் சம்பளமாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை ஏபிபி நாடு செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட பதிவு :
Watch #Thuglife in @epiqcinema from June 5th#Thuglife Bookings open#ThuglifeFromJune5 in Cinemas near you#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan… pic.twitter.com/oDMGPT8x3u— Raaj Kamal Films International (@RKFI) June 3, 2025
நடிகை திரிஷா கிருஷ்ணனுக்கு ஜோடியாக நடிகர் சிலம்பரசன் நடித்து வருகிறார் என ரசிகர்கள் ஆரம்பத்தில் நினித்துவந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. தக் லைஃப் பட ட்ரெய்லரில், நடிகர் கமல்ஹாசனுடன் திரிஷா இருப்பது போலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வந்தது.
அதைத் தொடர்ந்து நேர்காணலில் பேசிடிய திரிஷா, இந்த படத்தில் இருந்து 2 நிமிட காட்சிகள் மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள், படத்தை முழுமையாக பார்த்துட்டுவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று கூறியிருந்தார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் பேசியது தொடர்பான சர்ச்சை தற்போது வரையிலும் நடந்துவருகிறது.
திரிஷாவின் நடிப்பில் உருவாகிவரும் படங்கள் :
தக் லைஃப் படத்தை தொடர்ந்து நடிகை திரிஷாவின் நடிப்பில், சூர்யா 45 படம் உருவாகிவருகிறது. சண்டிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தை, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அதைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் மலையாளத்தில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ராம் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நடிகை திரிஷா கிருஷ்ணன் தக் லைஃப் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.