Thug Life : கமல் – சிம்புவின் ‘தக் லைஃப்’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை!
Online Release Of Thug Life Banned : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவரின் முன்னணி நடிப்பிலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பிலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படம் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தைத் திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் உச்ச நடிகர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஆக்சன் கதைக்களத்துடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தினை கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனங்களுடன், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டிலே வெளியானது. தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படமானது உருவாகியுள்ளது. சமீப நாட்களாக தக் லைஃப் படத்தின் கன்னட ரிலீஸ் (Kannada release) தொடர்பான பிரச்சனைகள் நடந்துவரும் நிலையில், தக் லைஃப் படத்தைக் கன்னட மொழியில் வெளியிட ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் இந்த தக் லைஃப் படம் வெளியாகாமலிருந்தால் , வருவாயில் 7 சதவீதம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக தக் லைஃப் படத்தை இணையத்தில் வெளியிடத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.




இப்படத்தின் இணையதள வெளியீட்டைத் தடுப்பதற்குச் சேவை நிறுவனங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பானது தக் லைஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தீர்வை வழங்கியுள்ளது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
#Thuglife Releasing Worldwide from Tomorrow#Thuglife Bookings open#ThuglifeFromJune5 in Cinemas near you#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact… pic.twitter.com/zEF6dfsVmM— Raaj Kamal Films International (@RKFI) June 4, 2025
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில், இந்த தக் லைஃப் படத்தில் 9 பாடல்கள் உருவாகியுள்ளது.
இது தற்போது இணையத்தில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் முத்த மழை என்ற பாடல் இருந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அசோக் செல்வன் உட்படப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
கமல் கன்னட மொழி விவகாரம் :
கடந்த 2025, மே 24ம் தேதியில் சென்னை சாய்ராம் கல்லூரியில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசியபோது நடிகர் கமல்ஹாசன், “தமிழ் மொழியில் இருந்துதான் உங்கள் மொழி ( கன்னடம்) வந்தது” என்று, கர்நாடக பிரபல நடிகர் சிவராஜ் குமாரிடம் கூறியிருந்தார். அந்த பேச்சானது மக்கள் மத்தியில் மொழி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
அது தொடர்பாக தக் லைஃப் படத்தைக் கன்னட மொழியில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் கமல் ஹாசனிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டது. மேலும் தக் லைஃப் படக்குழு தொடர்பாகக் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடக் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.