Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இங்கு கமலுக்கு ரசிகர்கள் அதிகம்… தக் லைஃப் படத்தை வெளியிட விரும்புகிறோம் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

Kamal Haasan's Thug Life : தக் லைப் படத்தை வெளியிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிக அளவு உள்ளனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம் எனவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு கமலுக்கு ரசிகர்கள் அதிகம்… தக் லைஃப் படத்தை வெளியிட விரும்புகிறோம் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
கமல்ஹாசன்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 03 Jun 2025 23:04 PM

கமல்ஹாசனின் (Kamal Haasan) தக் லைஃப் (Thug Life) திரைப்படம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. கன்னட மொழி குறித்து கமல் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலுவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியிருந்தார். அதில், தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழியைப் பற்றி நான் இழிவாகப் பேசவில்லை. நான் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளையும் சமமாக தான் பார்க்கிறேன். தமிழைப் போல கன்னட மொழியும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு வருத்ததை அளித்துள்ளது. என்று குறிப்பிட்டருந்தார். ஆனால் கடிதத்தில் மன்னிப்பு கேட்காதது குறித்து கன்னட அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்துக்கு கமல் வருத்தம்

இந்த நிலையில் தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூன் 3, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கமல் தரப்பில் கன்னட மொழி மீது எனது காதலை வெளிப்படுத்தி நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கன்னட மொழி மிகவும் செழுமை வாய்ந்தது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்பதை வெளிப்படுத்தி பேசினேன். கன்னட மொழியை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நான் பேசவில்லை தக் லைப் பட விழாவில் எனது பேச்சால் நடிகர் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தால் வருந்துகிறேன் என கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தக் லைஃப் பட தயாரிப்பு நிறுவனத்தின் பதிவு

 

இந்த நிலையில் வழக்க விசாரித்த உயர்நீதிமன்றம், கமல் கன்னடத்தை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். ஆனால் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை ஏன் இல்லை. கன்னட மக்களின் உணர்வை கமல் குறைத்து மதிப்பிட்டுள்ளார். பிரச்னையின் தீவிரத்தை அவர் உணர வேண்டும். மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ என கேள்வி எழுப்பியிருந்தது.

தக் லைஃப் படத்தை வெளியிட விரும்பும் கர்நாடக வர்த்தக சபை

தக் லைப் படத்தை வெளியிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தகவல், கர்நாடகாவில் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிக அளவு உள்ளனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம். விரைவாக பிரச்னையை பேசி முடித்து படத்தை வெளியிடுவதற்கான வழியைப் பார்க்கலாம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு தெரிவித்திருக்கிறார்.

தக் லைஃப் பட ஆல்பத்தில் இணைந்த சின்மயி பாடிய 'முத்த மழை' பாடல்!
தக் லைஃப் பட ஆல்பத்தில் இணைந்த சின்மயி பாடிய 'முத்த மழை' பாடல்!...
பாஸ்போர்ட் எளிதில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
பாஸ்போர்ட் எளிதில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?...
பெங்களூரு சோக சம்பவம்.. மாநில அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!
பெங்களூரு சோக சம்பவம்.. மாநில அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!...
சூப்பர் ஹீரோ படத்திற்காக கூட்டணி அமைக்கும் லோகேஷ் - அமீர் கான்
சூப்பர் ஹீரோ படத்திற்காக கூட்டணி அமைக்கும் லோகேஷ் - அமீர் கான்...
IIT-ல் படிக்கப்போகும் முதல் பழங்குடியின மாணவி.. குவியும் பாராட்டு
IIT-ல் படிக்கப்போகும் முதல் பழங்குடியின மாணவி.. குவியும் பாராட்டு...
'சூர்யா46' படக்குழுவுடன் நடிகர் சூர்யா பழனியில் சுவாமி தரிசனம்!
'சூர்யா46' படக்குழுவுடன் நடிகர் சூர்யா பழனியில் சுவாமி தரிசனம்!...
கர்நாடகா முதல்வர், துணை முதல்வர் மீது காவல் நிலையத்தில் புகார்!
கர்நாடகா முதல்வர், துணை முதல்வர் மீது காவல் நிலையத்தில் புகார்!...
திருப்பதி போல தமிழக கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு - விரைவில் அமல்
திருப்பதி போல தமிழக கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு - விரைவில் அமல்...
இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் கற்றது தமிழ் - நடிகர் ஜீவா!
இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் கற்றது தமிழ் - நடிகர் ஜீவா!...
புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!
புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!...
முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? எப்படி செய்வது
முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? எப்படி செய்வது...