கமல் ஹாசன் நடிப்பில் இறுதியாக ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் எது தெரியுமா?
Vikram Movie : நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் முன்னதாக கமல் ஹாசன் நடிப்பில் ஹிட் அடித்தப் படம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் கமல் ஹாசன் நடிப்பில் இறுதியாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ன என்பது குறித்து பார்க்கலாம். நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்தப் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வசூல் ரீதியாக மட்டும் இல்லை விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தையேப் பெற்றது இந்தியன் 2 படம்.
விக்ரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From “Once upon a time…” to Always in Time#3YearsofVikram#Vikram#KamalHaasan #VikramAllTimeRecord@ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasill @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @RedGiantMovies_ @SonyMusicSouth@anbariv… pic.twitter.com/01HDeFoC9O
— Raaj Kamal Films International (@RKFI) June 3, 2025
கமல் ஹாசனுக்கு ஹிட் கொடுத்த விக்ரம் படம்:
இறுதியாக கமல் ஹாசனுக்கு ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் விக்ரம். கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வ்க்ரம். இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த விக்ரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் இரண்டாவது பாகமாக வெளியானது இந்த விக்ரம் படம். முதல் பாகமாக கைதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் , காளிதாஸ் ஜெயராம் , காயத்ரி , செம்பன் வினோத் ஜோஸ் , சந்தான பாரதி மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
விக்ரம் படத்தின் கதை என்ன?
படத்தின் முதல் காட்சியிலேயே நடிகர் கமல் ஹாசன் இறந்துவிட்டதாக நினைக்கப்படும் நிலையில் அவர் தனது மகன் காளிதாஸை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக உயிரிழந்ததுபோல காட்டிக்கொள்கிறார். பிறகு போதை உலகின் மன்னனாக இருக்கும் விஜய் சேதுபதியை வெளியே கொண்டு வருகின்றார்.
இதற்கு இடையில் போலீஸாரால் அழைத்து வரப்படும் நடிகர் ஃபகத் பாசில் கமல் ஹாசனின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறார். அதில் அவர் உயிரிழக்கவில்லை என்றும் அவர் செய்யும் செயல் நல்ல விசயத்துக்கு என்று உணர்ந்து போலீசுக்கு வேலை செய்வதை நிறுத்தி விடுகிறார்.
பிறகு கமல் ஹாசனுடன் இணைந்து வேலை செய்கிறார் ஃபகத் பாசில். அவர்கள் இறுதியில் அந்த போதை சாம்ராஜியத்தை அளித்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பாகமான கைதி படத்தில் ரெஃபரன்ஸ் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.