Kamal Haasan : கன்னட மொழி சர்ச்சை.. கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தலைவருக்குக் கமல்ஹாசன் கடிதம்!
Kamal Haasan Statement : தமிழ் சினிமாவில் பிரபல மிக்க நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். அவரின் முன்னணி எழுத்திலும், நடிப்பிலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கன்னட மொழி குறித்து தவறாகப் பேசியதாகக் கமல்ஹாசன் மீது சர்ச்சை எழுந்தது, அதற்கு விளக்கம் கொடுக்கும் விதத்தில் கமல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் மணிரத்னத்தின் (Mani Ratnam) எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் சிலம்பரசனும் (Silambarasan TR) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தைத் தொடர்ந்து, இந்த தக் லைஃப் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2025, மே மாதத்தில் இறுதியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து (Kannada language) தவறாகப் பேசியதாகச் சர்ச்சைகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் (Karnataka) இந்த சர்ச்சை வெடித்து, தக் லைஃப் படத்தின் கன்னட மொழி ரிலீஸ் தடை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த படம் கன்னடத்தில் ரிலீசாக வேண்டும் என்றால் , அதற்குக் கமல்ஹாசன் மன்னிப்பு கூறவேண்டும் என்றும் கர்நாடகாவில் வலியுறுத்தப்பட்டது. தக் லைஃப் படத்தின் ரிலீசிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, ஜூன் 3, 2025 அன்று நீதிமன்றம் கமல்ஹாசனிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், கர்நாடகா திரைத்துறை வர்த்தக தலைவர் நரசிம்மலுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசன், தான் மேடையில் பேசிய விஷயம் மக்களுக்குத் தவறாக புரிந்துள்ளது என்றும் அது குறித்து விளக்கமான பதிலைக் கடிதமாக வெளியிட்டுள்ளார்.




நடிகர் கமல் ஹாசன் வெளியிட்ட கடிதம் :
#KamalHaasan‘s letter to Narasimhalu, President of Karnataka Film Chamber of Commerce !!
“It pains that my statement in #ThugLife Audio Launch has been misunderstood which I spoke genuinely. There is no dispute on the rich legacy of Kannada. Like Tamil Kannada has proud literary… pic.twitter.com/5QG8VR4BFz
— AmuthaBharathi (@CinemaWithAB) June 3, 2025
இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசன், நான் தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழியைப் பற்றி இழிவாகப் பேசவில்லை, நான் தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளும் சமமாகத்தான் பார்க்கிறேன், அதிலும் நான் ஒரு இந்தியன். தமிழ் மொழியைப் போலக் கன்னட மொழியும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
மேலும் தக் லைஃப் திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனக்கு வேதனையை அளிக்கிறது. நான் உண்மையைத்தான் சொன்னேன் கன்னட மொழியைப் போல வளமான மொழி, வேறு எந்த சர்ச்சையும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தக் லைஃப் திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் கமல் பேச்சு :
கடந்த 2025, மே 27ம் தேதியில், சென்னை சாய்ராம் கல்லூரியில், தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், மேடையில் பல விஷயங்களைப் பேசினார். அதில் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயம், கன்னட மொழியைப் பற்றி கமல் கூறியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல் “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று பேசியிருந்தார். இது கன்னட மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த சர்ச்சையைத் தொடர்ந்து , தக் லைஃப் படமானது கன்னடத்தில் வெளியாகுமா ஆகாதா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.