Suriya 45 : சூர்யா 45ல் ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும்.. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேச்சு!
Sai Abhayankkar About Suriya 45 Movie : தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக நுழைந்தவர் சாய் அபயங்கர். இவரின் இசையமைப்பில் தமிழில் பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகிவருகிறது. இதில் சூர்யாவின் 45வது படமும் உருவாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா (Suriya) . இவரின் நடிப்பில் ரெட்ரோ (Retro) படத்தைத் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் சூர்யா45 (Suriya 45) . இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி (RJ Balaji) இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜைகளானது கடந்த 2024, நவம்பர் மாதத்தில் பூஜைகளுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் நடிகர் சூர்யா ஒரு கிராமத்து நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்து வருகிறார் . இந்த ஜோடி பல வருடங்களுக்குப் பின் இந்த படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhayankkar) இசையமைத்து வருகிறார். இது இவர் இசையமைத்துவரும் 2வது படமாகும். இந்த படத்தில் இசையமைப்பது குறித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சாய் அபயங்கர் பேசியதாவது,”இந்த படத்தில் சூர்யாவின் ஃபேன் பாய் சம்பவம் நிச்சயம் இருக்கு” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.




சூர்யா 45ல் இசையமைப்பது குறித்துச் சாய் அபயங்கரின் கருத்து :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதில், “நான் சூர்யா 45 படத்தில் ஒப்பந்தமானதும் எனது மைண்டில் என்ன மியூசிக் வருகிறதோ அதை ஒரு தீம் பாடலாக இசையமைத்து வைத்திருப்பேன், சூர்யா சார் என்றாலே மாஸ்தான், அவருக்கு மாஸான தீம் நிச்சயமாக இந்த படத்தில் இருக்கும். நிச்சயமாக இந்த படத்தில் சூர்யாவின் ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.
நிச்சயமாக இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக அமையும், பொதுவாக படங்களில் பின்னணி இசை எனக்கும் மிகவும் பிடிக்கும், நான் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜிவி பிரகாஷ் சாரிடம் வேலை செய்திருக்கிறேன். இப்போதுவரை படங்களின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Happy and excited to welcome the young sensation @SaiAbhyankkar onboard for #Suriya45 🔥❤️ pic.twitter.com/bHCPCa3ufv
— RJ Balaji (@RJ_Balaji) December 9, 2024
இசையமைப்பாளர் சாய் அபயங்கர், சூர்யா 45 படத்தைத் தொடர்ந்து, பென்ஸ், STR 49, டியூட் போன்ற படங்களிலும் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 20 வயதிலே மிகப் பிரம்மாண்ட நடிகர்களில் 4 படங்களுக்கு இசையமைத்துவருகிறார் என்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.