OTT Update: ‘தலைவன் தலைவி’ பட ஓடிடி ரிலீஸ்… வெளியான அறிவிப்பு!
Thalaivan Thalavii Movie OTT Release : தமிழ் சினிமாவில் கடந்த 2025, ஜூலை மாதத்தில் இறுதியில் வெளியான படம் தலைவன் தலைவி. நடிகர்கள் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மற்றும் எந்த ஓடிடியில் வெளியாகிறது என்பதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalavii). இந்த திரைப்படத்தில் அதிரடி வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்திருந்தார். இவரின் முன்னணி நடிப்பில் 51வது படமாக இந்த தலைவன் தலைவி படமானது வெளியாகியிருந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக , நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்திருந்தார். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்திருந்தார். மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது . இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. அதிரடி காதல் மற்றும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட இப்படம், மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
2 நாளிலே உலகளவில் சுமார் ரூ.35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு ஓப்பனிங் முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருந்தது என்றே கூறலாம். இப்படமானது வெளியாகி 4 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 22ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகவுள்ளதாம்.




இதையும் படிங்க : அட்டகத்தி தினேஷ்- கலையரசனின் ‘தண்டகாரண்யம்’ – வெளியான அப்டேட்!
தலைவன் தலைவி படமானது எந்த ஓடிடியில் வெளியாகிறது ;
இந்த தலைவன் தலைவி திரைப்படமானது விவாகரத்து மற்றும் கூட்டுக் குடும்பம் தொடர்பான கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது . விஜய் சேதுபதியின் நடிப்பில் பல ஆண்டுகளுக்குபின், வெளியான கிராமத்துக் கதைக்களம் கொண்ட படமாக இது இருந்தது.
இதையும் படிங்க ; நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ – வெளியானது டீசர்!
தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2025, ஆகஸ்ட் 22ம் தேதியில் அமேசன் ப்ரைம் வீடியோவில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பானது ஓடிடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு பதிவு :
Get ready to fall in love with Aagasaveeran and Perarasi… twice 👀#ThalaivanThalaiviiOnPrime, Aug 22@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @SathyaJyothi @Lyricist_Vivek @studio9_suresh@Roshni_offl @kaaliactor @MynaNandhini @ActorMuthukumar pic.twitter.com/VqI3bn7zqP
— prime video IN (@PrimeVideoIN) August 15, 2025
தலைவன் தலைவி படத்தின் மொத்த வசூல் :
இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிகர்கள் தீபா சங்கர், யோகி பாபு, ரோஷ்ணி ஹரிப்ரியன், மைனா நந்தினி, பாலா சரவணன், ஆர்.கே. சுரேஷ், காளி வெங்கட் மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி 20 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், இதுவரை மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா ? இப்படம் இதுவரை சுமார் ரூ.80 கோடிகள் கிட்ட வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.