Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie vs War 2: கூலி vs வார் 2.. வசூலில் முந்தியது யார்? – வெளியான அப்டேட்!

Coolie VS War 2 : இந்திய சினிமாவில் கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியான, பான் இந்தியப் படங்கள்தான் கூலி மற்றும் வார் 2 திரைப்படங்கள். இப்படமானது வெளியாகி 2 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், இதுவரை மொத்தம் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

Coolie vs War 2: கூலி vs வார் 2.. வசூலில் முந்தியது யார்? – வெளியான அப்டேட்!
கூலி VS வார் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Aug 2025 12:00 PM

தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான இப்படமானது, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன், ஆமிர்கான் (Aamir Khan), உபேந்திர ராவ், நாகார்ஜுனா (Nagarjuna), சவுபின் ஷாஹிர் , சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்த நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது முதல் நாள் முடிவில் சுமார் ரூ.151 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது 2வது நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா? இந்த கூலி படமானது இந்தியாவில் மட்டுமே 2வது நாளில் சுமார் ரூ 56.50 கோடிகளுக்கு மேல் வசூல் செத்துள்ளதாம். உலகளாவிய வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் கடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்துடன் வெளியான வார் 2 (War 2)திரைப்படமும் இரண்டாவது நாளில் சுமார் ரூ.56.35 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.

இதையும் படிங்க : வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மொத்தத்தில் இருவரை இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.108 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் போட்டியில் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்தான் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரம் sacnilk இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

கூலி படக்குழு வெளியிட்ட முதல் நாள் வசூல் விவரம் :

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்.-ன் வார் 2 திரைப்படம் :

பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில், பான் இந்தியப் படமாக வெளியாகியிருப்பது வார் 2 திரைப்படம். இந்த படத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்திருந்தனர். இந்த படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்துடன் ஒன்றாகத் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படத்திற்குத் தென்னிந்திய சினிமாவில் அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : ஜிம் ஒர்கவுட்டில் மிரட்டும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ

பாலிவுட் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தது. இதில் முன்னணி நடிகையாக கியாரா அத்வானியும் இணைந்து நடித்திருந்தார். இவருக்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்றே கூறலாம். இப்படமானது சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த நிலையில், இதுவரை மொத்தத்தில் சுமார் ரூ.108 கோடிகள் மட்டுமே வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூலி படத்துடன் ஒப்பிடும்போது இந்த வார் 2 படத்திற்குத் தென்னிந்திய மக்களிடையே வரவேற்புகள் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.