Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சேகர் கம்முலா படத்திற்காக 3-வது முறையாக இணையும் நானி – சாய்பல்லவி கூட்டணி? வைரலாகும் தகவல்

Actress Sai pallavi: நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் தமிழ் மற்றும் மலையாளத்தை விட தெலுங்கு சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்தப் படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சேகர் கம்முலா படத்திற்காக 3-வது முறையாக இணையும் நானி – சாய்பல்லவி கூட்டணி? வைரலாகும் தகவல்
நானி - சாய்பல்லவி Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Aug 2025 12:30 PM

நடிகை சாய் பல்லவி (Actress Sai pallavi) மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். தமிழ் பெண்ணான இவர் மாலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ் மற்றும் மலையாள சினிமாவைத் தாண்டி தெலுங்கு சினிமாவில் இவர் அதிகப் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே நடிகை சாய் பல்லவிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ஃபிதா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் வருண் தேஜ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இயக்குநர் சேகர் கம்முலா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகை சாய் பல்லவி இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகை சாய் பல்லவி தெலுங்கு சினிமாவில் நட்டித்தப் படம் தண்டேல். நடிகர் நாக சைத்தன்யா இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணையும் நானி – சாய் பல்லவி கூட்டணி:

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் படம் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி நடிகர் நானி நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து மிடில் கிளாஸ் அப்பாயி மற்றும் ஷ்யாம் சிங்கா ராய் என இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இந்த இரண்டு படத்திலும் இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக இவர்களின் ஜோடி இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்தான் தெலுங்கு சினிமாவில் நடிகை சாய் பல்லவியை நாயகியாக அறிமுகப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் இதுவரை இரண்டு முறை நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரத்தை கொடுத்த கார்த்திக் சுப்பராஜிற்கு நன்றி – பூஜா ஹெக்டே!

சாய் பல்லவி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

Also Read… ஷௌபின் ஷாகிர் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்: யார் இவர் தெரியுமா?