Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாட்டாமை பட மிக்சர் கேரக்டர் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் கலகல பேச்சு!

Director KS Ravikumar : இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்த இயக்குநர் ஆவார். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் படமாக தற்போத் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டாமை பட மிக்சர் கேரக்டர் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் கலகல பேச்சு!
கே.எஸ்.ரவிக்குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Aug 2025 15:37 PM

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (KS Ravikumar) எழுதி இயக்கிய படம் நாட்டாமை. கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி 1994-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இவர் தான் இந்தப் படத்தில் நாயகன். இவருடன் இணைந்து நடிகர்கள் குஷ்பு, மீனா, ராஜா ரவீந்திரன், சங்கவி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம், பாண்டு, வினு சக்கரவர்த்தி, வைஷ்ணவி, ராணி, விஜயகுமார், ஈரோடு சௌந்தர், ஏ.கே.செந்தில் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்து இருந்தாலும் இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

குறிப்பாக நாட்டாமை படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது என்றால் அதனைப் பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதன்படி இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து இருந்தார். படம் 175 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி இன்ஸ்டஸ்ரியல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நாட்டாமை மிக்சர் மாமா கதாப்பாத்திரம் உருவான கதை:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் காமெடியில் பிண்ணியிருப்பார்கள். இதில் செந்தில் கவுண்டமணியின் தந்தையாக இருப்பார். கல்யாண வயதில் மகனை வைத்திருக்கும் அவர் ஊர் முழுக்க செட்டப்களை வைத்து இருப்பதுதான் படத்தின் காமெடி.

அப்படி கவுண்டமணிக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் பெண்ணின் அம்மா செந்திலின் செட்டப்பாக இருப்பார். செந்திலுக்கு பிறந்தது அந்தப் பெண் என்பதை அறிந்து மை சன் இது உன் தங்கச்சி என்று கவுண்டமணியிடம் அவர் கூறும் போது கலகலப்பாக இருக்கும். நீ அப்பானா அப்போ அங்க மிக்சர் சாப்டுட்டு இருக்கது யார் என்று கவுண்டமணி கேட்க அந்தப் பெண்ணின் அம்மா அது இனிசியல் பிரச்னை வராம இருக்க நான் தான் சோறு போட்டு வச்சு இருக்கேன் என்று கூறுவார்.

இந்த நிலையில் இந்த கதாப்பாத்திரம் எப்படி அமைந்தது என்று கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவரது படப்பிடிப்பில் எலக்ட்ரிஷனாக இருந்த நபர் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்துள்ளார். அவரிடைம் ஏன் இப்படி ஒரே இடத்துல இருக்கீங்க எழுந்து போய் எதாவது வேலை செய்ய வேண்டியதுதான என்று கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் சார் நான் எலக்ட்ரிஷன் அதனால அதுல எதச்சும் வேலை இருந்தா சொல்லுங்க நான் செய்யுறேன்னு சொல்லி இருக்கார்.

என்கிட்டையே நக்கலா பேசுறியானு நினைத்த கே.எஸ்.ரவிக்குமார் இந்த மிக்சர் மாமா கதாப்பாத்திரம் வரும் போது அவரைப் பயன்படித்தியதாக தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்… FDFS பார்க்க வந்த பிரபலங்கள்!

கே.எஸ்.ரவிக்குமார் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by K S Ravikumar (@the_ksravikumar)

Also Read… கூலி படத்திற்காக லோகேஷ் அண்ணாவிற்கு நன்றி… நடிகை மோனிஷா பிளெஸ்ஸியின் நெகிழ்ச்சிப் பதிவு