பர்த்டே கேர்ள் சாயிஷாவின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம் தெரியுமா?
Actress Sayyeshaa : பிரபல நடிகை சாயிஷா இன்று தனது 28-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமீப காலமாக பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் தற்போது தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

சினிமா குடும்பத்தில் பிறந்த நடிகை சாயிஷா (Actress Sayyeshaa) கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அது குழந்தை நட்சத்திரமாகவே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தது. இந்தி சினிமாவில் இவரது குடும்பத்தில் உள்ள பலர் முன்னணி நடிகர்களாக இருந்த போதிலும் நடிகை சாயிஷா நாயகியாக அறிமுகம் ஆனது என்னமோ தெலுங்கு சினிமாவில் தான். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி இயக்குநர் விவி விநாய்க் இயக்கத்தில் வெளியான அகில் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சாயிஷா. இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கேன்னி நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரும் இந்தப் படத்தின் மூலமாகதான் நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சாயிஷா இந்தி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் இவர் படங்கள் நடிக்கவில்லை. இவர் தமிழில் இறுதியாக நாயகியாக நடித்தப் படம் டெடி. அவரது கணவர் ஆர்யா இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சாயிஷாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகை சாயிஷா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இறுதியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடலில் நடிகை சாயிஷாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் சாயிஷா. அந்த வகையில் நடிகை சாயிஷாவிற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 42 லட்சம் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிரபாஸின் பாகுபலி தி எபிக் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
நடிகை சாயிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!