Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!

Actress Simran: சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை சிம்ரன். இவரது நடனத்திற்கு சொக்காத ஆட்களே இல்லை. இந்த நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகை த்ரிஷா குறித்து பேசியது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!
த்ரிஷா, சிம்ரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2025 17:46 PM

நடிகர் பிரஷாந்த் (Actor Prashanth) நாயகனாகவும் நடிகை சிம்ரன்(Actress Simran) நாயகியாகவும் நடித்து கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜோடி. இயக்குநர் பிரவீன் காந்தி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் ஜோடி படத்தை சோனி ஓரியண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல படத்தின் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் உடன் இணைந்து நடிகர்கள் விஜயகுமார், நாசர், ஜனகராஜ், ரமேஷ் கண்ணா, ஸ்ரீவித்யா, அம்பிகா, சுமித்ரா, தாமு, தினந்தோரும் நாகராஜ், சக்தி சிதம்பரம், எஸ்.என்.லட்சுமி, சாந்தி வில்லியம்ஸ், லாவண்யா, ஜானகி சபேஷ், பிரியங்கா, பாண்டு, மதன் பாப், ராம்ஜி, சுக்ரன், மேலாளர் சீனு, லக்ஷ்மி ரத்தன், திரிஷா என பலர் நடித்து இருந்தனர். த்ரிஷா இந்தப் படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக ஒருசில காட்சிகளில் நடித்து இருந்தாலும் இதுதான் இவரது அறிமுகப் படம் ஆகும்.

த்ரிஷாவின் சினிமா பயணம் குறித்து பேசிய சிம்ரன்:

இந்த நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகை த்ரிஷா குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது த்ரிஷா மிகவும் திறமையான நடிகர். அதுமட்டும் இன்றி அவர் மிகவும் அழகாக உள்ளார். எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்

இப்போ அவங்க சினிமாவில கம்பேக் சொல்ல முடியாது ஆனா தொடர்ந்து இப்போ அவங்க மணி சார் கூட வொர்க் பன்றாங்க. விஜய் மற்றும் அஜித்னு தொடர்ந்து பிசியா நடிச்சுட்டு இருக்காங்க. அவங்களும் நானும் ஜோடில ஒன்னா நடிச்சோம். இப்போ அவங்களோட வளர்ச்சி பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு என்று சிம்ரன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Ajith Kumar : ’வீட்ல போய் நான் காலில் விழணும்’ வைரலாகும் அஜித் – ஷாலினி வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சிம்ரனின் பேச்சு:

Also Read… Lokesh Kanagaraj : ’எனது படத்திலேயே கம்பேக் கொடுப்பேன்’ நடிகர் ஸ்ரீ குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்!