Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகேஷ் பாபு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் ராஜமௌலி

Director Rajamouli: இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் SSMB29. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வருகிறார். இன்று மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் ராஜமௌலி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகேஷ் பாபு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் ராஜமௌலி
மகேஷ் பாபு மற்றும் ராஜமௌலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Aug 2025 13:23 PM

இயக்குநர் ராஜமௌலி (Director Rajamouli) தற்போது நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு SSMB29 என்று தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் தொடர்ந்து ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பணிகள் தொடங்கியது. அதில் இருந்து எப்போது அப்டேட் என்று ரசிகர்களும் தொடர்ந்து இணையத்தில் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று 09-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு SSMB29 படத்தின் நாயகன் நடிகர் மகேஷ் பாபு தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் இன்று SSMB29 படத்திலுருந்து ஏதேனும் அப்டேட் வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆளுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ராஜாமௌலி அப்டேட் நவம்பர் மாதம் வரும் என்பாதற்காக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. SSMB29 படத்தின் மிகப்பெரிய அப்டேட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையில் இயக்குநர் ராஜமௌலி கூறியது என்ன?

இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களே, அதே போல் மகேஷின் ரசிகர்களே, நவம்பரில் ஒரு பிரமாண்டமான வெளியீடு வெளியிடப்படும் வரை அனைவரும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் படப்பிடிப்பு தொடங்கி சிறிது காலம் ஆகிறது, படத்தைப் பற்றி அறிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், இந்த படத்தின் கதை மற்றும் நோக்கம் மிகவும் பெரியது, வெறும் படங்கள் அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகள் அதை நியாயப்படுத்த முடியாது என்று நான் நினைக்கிறேன்.

Also Read… மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

நாங்கள் தற்போது உருவாக்கும் சாராம்சம், ஆழம் மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்த ஏதாவது ஒன்றை உருவாக்கி வருகிறோம். இது நவம்பர் 2025 இல் வெளியிடப்படும், மேலும் இதை இதற்கு முன் பார்த்திராத வெளியீடாக மாற்ற முயற்சிக்கிறோம் என்றும் அந்தப் பதிவில் இயக்குநர் ராஜமௌலி குறிப்பிட்டு இருந்தார்.

இணையத்தில் கவனம் பெரும் ராஜமௌலியின் எக்ஸ் தள பதிவு:

Also Read… கூலி படத்தில் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் ட்விட்டர்ல எல்லாம் கேட்ட கேள்வி இதுதான் – ஸ்ருதி ஹாசன் கலகல பேச்சு!