துல்கர் சல்மானின் காந்தா படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
Kantha Movie: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் காந்தா. பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan) நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் மூன்று மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதில் தமிழில் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ள காந்தா படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து வருகிறார். பீரியட் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர் சமுத்ரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிகராக இருக்கும் துல்கர் சல்மானுக்கும் இயக்குநராக இருக்கும் சமுத்ரகனி இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இது சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டீசரைப் பார்க்கும் போதே தெரிகிறது.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நடிகை பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இந்தப் படத்தை நடிகர்கள் ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.




காந்தா படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்:
முன்னதாக நடிகர் துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 28-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு காந்தா படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் முதல் சிங்கிள் நாளை 09-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்ற்து.
காந்தா படம் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Love blossoms on the silver screen! ❤ Check out ‘PANIMALARE’, the first song of #Kaanthafilm tomorrow at 4:30pm and watch #Bhagyashriborse and I take center stage. 💃🏻✨ Know our story on September 12, releasing worldwide.
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬… pic.twitter.com/Q0YRJjhLVK
— Dulquer Salmaan (@dulQuer) August 8, 2025
Also Read… யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது என்ன சுகம் பாடலின் லிரிக்கள் வீடியோ