கோவில் திருவிழாவில் கும்மி டான்ஸ் ஆடி அசத்திய சூரி – இணையத்தில் கவனம் பெறும் வீடியோ!
Actor Soori Kummi Dance: கோலிவுட் சினிமாவில் காமெடியனாக இருந்து தற்போது நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. இவரது படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூரி அவரது சொந்த ஊரில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் வந்து சென்று காமெடியனாக அடையாளப்படுத்தப்பட்டு தற்போது நாயகனாக தன்னை நிலைநிறுத்தி உள்ளார் நடிகர் சூரி (Actor Soori). சினிமாவில் இவரது பயணங்கள் பலருக்கும் உந்துதலாக இருக்கும். கடின உழைப்பும் நமது திறமையின் மீது நம்பிக்கையும் இருந்தால் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக நடிகர் சூரி இருக்கிறார். காமெடியனாக இவர் நடித்தப் படங்களும் சரி தற்போது கதையின் நாயகனாக இவர் நடிக்கும் படங்களும் சரி மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மாமன் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி தற்போது மண்டாடி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் கடல் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாகி வருகின்றது. மண்டாடி என்பதற்கான பொருள் என்ன என்றால் கடலில் மீன் பிடிக்கும் அனுபவம் அதிகம் உள்ளவரை அழைக்கும் பெயர் என்றும் விளக்கம் தெரிகிறது. மேலும் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் காமெடியை மையமாக வைத்து உருவான மாமன் படத்திற்கு பிறகு மீண்டும் சீரியசான ரோலில் நடிகர் சூரி நடிக்க உள்ளது படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போதே தெரிகிறது.




இணையத்தில் கவனம் பெறும் சூரியின் கும்மி டான்ஸ்:
இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூரி கும்மி பாட்டுக்கு ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது எங்கள் ராஜாக்கூர் கிராமத்தில் திருவிழா இன்று மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கியது என்று தனது டான்ஸ் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
எங்கள் ராஜாக்கூர் கிராமத்தில் திருவிழா இன்று மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கியது! 🎉❤️🙏💐💐💐 pic.twitter.com/iJVR7k3qaC
— Actor Soori (@sooriofficial) August 4, 2025