கூலி படத்தில் நடிக்க இப்படிதான் சம்மதித்தேன் – நடிகர் அமீர் கான் ஓபன் டாக்
Actor Amir Khan: பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியான படங்களுக்கு தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம்.

பாலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் அமீர் கான் (Actor Amir Khan). இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் சமீபத்தில் வெளியான சித்தாரே ஜமீன் பர் படம் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தி சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகரக்ளிடையேயும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு வெளியான சாம்பியன்ஸ் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலான இந்தப் படத்தை நடிகர் அமீர் கான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஓடிடி வெளியீடு எப்போது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படம் யூடியூபில் வெளியாகும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அமீர் கான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அமீர் கான் தற்போது தமிழில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே வைரலான நிலையில் சமீபத்தில் அமீர் கான் இந்த கூலி படத்தில் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.




கதையே கேட்காம கூலி படத்தில் நடிக்க சம்மதித்தேன்:
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர் கான் தான் படத்தில் இருக்கும் கெட்டப்பிலேயே வந்து ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருந்தார். மேலும் அந்த விழாவில் பேசிய நடிகர் அமீர் கான் கூலி படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது நான் கதையை கேட்கவில்லை. ஸ்கிரிப்ட் பேப்பரையும் படிக்கவில்லை. ரஜினிகாந்த சார் நடிக்கிறார் என்றால் நான் நிச்சயமாக நடிப்பேன் என்று தெரிவித்ததாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.
Also Read… Jana Nayagan: நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?
நடிகர் அமீர் கான் புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட படக்குழு:
With dapper charm and magnetic presence, here is Aamir Khan on stage! 😎🖤 #CoolieUnleashed ✨@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan #Coolie #CoolieFromAug14 pic.twitter.com/Wsm7iTDenb
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
Also Read… MS Bhaskar: உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!