Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
Karthi Hosted A lunch To Sadar 2 Crew : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் வா வாத்தியார் மாறும் சர்தார் 2 என இரு படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இதில் சமீபத்தில் ஷூட்டிங் நிறைவடைந்த சர்தார் 2 படக்குழுவிற்கு, நடிகர் கார்த்தி ஸ்பெஷல் விருந்து கொடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தியின் (Karthi) முன்னணி நடிப்பில் கோலிவுட் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழ் சினிமாவையும் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். இவர் நடிகர் நானியின் (Nani) நடிப்பில் இறுதியாக வெளியான ஹிட் 3 (HIT 3) படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். மேலும் ஹிட் 4 படத்திலும் இவர்தான் முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் தமிழில்இரு படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது. அதில் மிகப் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம் சர்தார் 2 (Sadar 2). இயக்குநர் பி.எஸ். மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது.
இப்படத்தின் இறுதி கடைசி ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த படக்குழுவினருக்கு நடிகர் கார்த்தி சிறப்பு விருந்து (Special party) கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் படு வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ‘நாம் சாதித்துவிட்டோம்’.. கிங்டம் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி
இணையத்தில் வைரலாகும் நடிகர் கார்த்தியின் வீடியோ :
Unseen 🚨😍
Our man himself served briyani
for the completion of the #Sardar2 shoot.@Karthi_Offl #Karthi #MrVersatileKarthi pic.twitter.com/JtxT0y5fPI— Karthi Trends (@Karthi_Trendz) July 31, 2025
சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
கோலிவுட் பிரபல இயக்குநர்களில் ஒருவர் பி.எஸ். மித்ரன். இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு எதிர்பார்த்ததை விடவும் அதீத வரவேற்பைப் பெற்று, வெற்றி பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை அடுத்ததாக இவரின், நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்தார் 2. இந்த படமானது பாகம் 1ன் தொடர்ச்சியான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ். ஜே. சூர்யா நடித்துள்ளார்.
இதையும் படிங்க : கருப்பு படத்தில் என் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகை சுவாசிகா ஓபன் டாக்!
மேலும் முன்னணி நாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துவருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் படக்குழு வரும் 2025 தீபாவளி அல்லது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இன்னும் இப்படத்தின் ரிலிஸ் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் புதிய படம் :
இந்த படத்தை அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது. இந்நிலையில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தின் இயக்குநர் தமிழுடன், நடிகர் கார்த்தி புதிய படத்தில் இணைந்துள்ளார். கார்த்தியின் 29வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட, அந்த படத்திற்குப் படக்குழு மார்ஷல் என டைட்டிலை வைத்துள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.