Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புஷ்பா பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா

Actor Vijay Devarakonda: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுவரும் படம் கிங்டம். இந்த நிலையில் அடுத்ததாக அவர் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிட்டது.

புஷ்பா பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2025 12:31 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தனது சொந்த முயற்சியல் அவர் தனக்கு என ஒரு அடையாளத்தைப் பதிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் கடந்த 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு கிங்டம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னுரி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக நடிகர் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெர்சி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வித்யாசமான கதைக்களத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்களை வெளியிட்டு இருந்தார். அதன்படி இயக்குநர் ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 14-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் ஒரு பீரியட் ட்ராமாவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல SVC 59 என்று அறிவிக்கப்பட்டுள்ள அடுத்தப் படத்தில் இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் ஆக்‌ஷன் ட்ராமாவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுகுமார் உடன் இணையும் விஜய் தேவரகொண்டா?

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் தேவரகொண்டா புஷ்பா படத்தின் புகழ் இயக்குநர் சுகுமார் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் சுகுமார் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் இயக்குநர் சுகுமார் உடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். தற்போது கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

Also Read… தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!

விஜய் தேவரகொண்டா சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா