பஞ்சதந்திரம் படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் போட்ட உழைப்பு பார்த்து அசந்துட்டோம் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விசயம்
Director KS Ravikumar: கோலிவுட் சினிமாவில் மக்களுக்கு பிடித்த இயக்குநர்களின் பட்டியளில் இருப்பவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இந்த நிலையில் பஞ்சதந்திரம் படத்தின் போது நடந்த சம்பவம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

இந்திய சினிமாவில் கேமியோ என்ற கலாச்சாரம் சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த கேமியோகலாச்சாரத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெயரே தெரியாமல் இருந்த போதிலும் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (Director KS Ravikumar) தான். அப்படி தான் இயக்குநராக அறிமுகம் ஆன புரியாத புதிர் படத்தில் இருந்து தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் 5 நிமிட காட்சியிலாவது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துவிடுவார். இப்படி ரசிகர்களின் ஃபேவரட் இயக்குநராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களும் தொடர்ந்து ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் தான் பஞ்சதந்திரம். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கடந்த 2002-ம் ஆண்டு எழுதி இயக்கி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடிக்க நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யுகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, ஐஸ்வர்யா, சங்கவி, வித்யா வெங்கடேஷ், தேவயானி, விஜயகுமார், நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெலியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படம் வரவேற்பைப் பெற்றது போலா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது.




மேகி கதாப்பாத்திரத்திற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த விசயம்:
பஞ்சதந்திரம் படத்தில் மரகதவள்ளி அலைஸ் மேகி என்ற லேடி எஸ்காட்டாக நடித்து இருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த நிலையில் பஞ்சதந்திரம் படத்தில் நடிப்பதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த விசயம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் இந்தப் படத்தில் முதலில் இந்த கதாப்பாத்திரத்திற்கு யார் நடிக்க வைப்பது என்று நானும் கமல் சாரும் யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணல் உடல் எடை அதிகரித்து இருந்தார்.
ஆனால் அந்த கதாப்பாத்திரத்திற்கு அப்படி இருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காக வேறு யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தோம் யாரும் செட்டாகவில்லை. பிறகு நான் ரம்யா கிருஷ்ணனை அழைத்து இந்த கதாப்பாத்திரம் குறித்து கூறி இதில் நீங்க நடிக்க வேண்டும் என்றால் உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் 30 நாட்கள்தான் இருக்கிறது என்று தெரிவித்தேன்.
Also Read… அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஹிட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?
அதற்கு ரம்யா கிருஷ்ணனும் சரி நான் உடல் எடையை குறைத்துவிட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டார். ஆனால் எனக்கும் கமல் சாருக்கும் 30 நாளில் அது முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால் அதே 30 நாட்களில் வேறு யார் கிடைப்பார்கள் என்றும் யோசித்தோம். ஆனால் ரம்யா கிருஷ்ணன் எங்களை அசத்திவிட்டார் என்றும் அந்தப் பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்து இருந்தார்.
நடிகை ரம்யா கிருஷ்ணனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram