பஞ்சதந்திரம் படத்தில் நடந்த சுவாரஸ்யம்… தேவயானி ஓபன் டாக்
நடிகை தேவயானி முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகை பஞ்ச தந்திரம் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அந்தப் படத்தில் நடித்தபோது நடிகர் கமல் ஹாசன் தனக்கு என்ன எல்லாம் சொல்லிக்கொடுத்தார் என்பது குறித்தும் நடிகை தேவயானி வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹோம்லி நாயகியாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி (Actress Devayani). மாடர்ன் உடையில் இருந்தாலும் கவர்ச்சி இல்லாமல் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை தேவயானி. தமிழில் பல படங்களில் இவர் நடித்து இருந்தாலும் இவர் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே அதிகமாக பாராட்டைப் பெற்ற படங்கள் காதல் கோட்டை, சூரிய வம்சம், நினைத்தேன் வந்தாய், கும்மிப்பாட்டு மற்றும் நீ வருவாய் என ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நாயகியாக மட்டும் நடிக்காமல் அவ்வப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார். அந்த வகையில் நடிகை தேவயானி பஞ்சதந்திரம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசனின் பஞ்சதந்திரம் படம்:
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பஞ்சதந்திரம். 5 நண்பர்களை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாகவும் அவருடைய நண்பர்களாக நடிகர்கள் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ஊர்வசி, சங்கவி, ஐசுவரியா, நாகேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்தில் தனது மனைவி சிம்ரனை விட்டு பிரிந்து வாழும் கமல் ஹாசனுக்கு நண்பர்கள் இணைந்து பர்த்டே சர்ப்ரைஸ் ஒன்றை செய்வார்கள் அதில் ஏற்படும் குழுப்பம் எப்படி சிம்ரனையும் கமல் ஹாசனையும் சேர்த்து வைப்பது என்பது படத்தின் கதை.
நடிகை தேவயானி இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
பஞ்சதந்திரம் படத்தில் நடிகை தேவயானி:
நடிகை தேவயானி பஞ்சதந்திரம் படத்தில் ஒரே ஒரு காட்சிக்கும் மட்டும் நடித்து இருப்பார். அதில் கமல் ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்தை காதலித்திருப்பார். அவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டதால் அவர் மீது அதிர்ப்த்தி ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பார். அப்போது நடிகர் கமல் ஹாசன் அவரைக் காப்பாற்ற வரும் போது அவரது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகின்றது.
இந்த காட்சி குறித்து நடிகை தேவயானி பேசியபோது இந்த காட்சியில் நடிக்கும் போதே அங்கு இருந்தவர்கள் எல்லாம் சிரித்துக்கொண்டே இருந்தார்கள் என்று காட்சி முடிந்ததும் கமல் ஹாசன் இதற்க்கு என்னையே டப்பிங் பேச சொன்னார். நீங்க பேசினால் நன்றாக இருக்கும் என்றார். அதனால் தான் அது நடந்தது என்று நடிகை தேவயானி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.